Advertisment

தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை காத்திருங்கள்; தமிழக, கேரள அரசுக்கு சி.பி.எஸ்.இ கோரிக்கை

சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை உயர் கல்வி சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு தமிழக, கேரள அரசுகள் மற்றும் ஐ.சி.எஸ்.ஐ-க்கு சி.பி.எஸ்.இ கோரிக்கை

author-image
WebDesk
New Update
தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை காத்திருங்கள்; தமிழக, கேரள அரசுக்கு சி.பி.எஸ்.இ கோரிக்கை

CBSE Results: Board requests Kerala, Tamil Nadu govts, and ICSI to wait for its Class 12 results: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) கடந்த வாரம் கேரளா மற்றும் தமிழ்நாடு அரசுகள் மற்றும் இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்திற்கு (ஐ.சி.எஸ்.ஐ) கடிதம் எழுதி, வரும் கல்வியாண்டுக்கான சேர்க்கை செயல்முறைகளை, சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவிக்கும் வரை நீட்டிக்கக் கோரியுள்ளது. சி.பி.எஸ்.இ வாரியத்தின் அதிகாரிகளின் கூற்றுப்படி, தேர்வு முடிவுகள் ஜூலை மூன்றாவது வாரத்திற்கு முன்பு வெளியாக வாய்ப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

யுனைடெட் கிங்டமில் உள்ள ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம், சிங்கப்பூரில் உள்ள லாசலே கலைக் கல்லூரி மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு விண்ணப்பித்த CBSE மாணவர்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெற்ற பின்னர், சி.பி.எஸ்.இ வாரியம் அதன் தேர்வு முடிவுகள் அட்டவணையைப் பற்றி நான்கு பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: NEET UG 2022; நீட் தேர்வு கட் ஆஃப் சதவீதம் கணக்கிடுவது எப்படி? தகுதிகள் என்ன?

ஏறக்குறைய அனைத்து மாநில கல்வி வாரியங்களும் தங்கள் முடிவுகளை வெளியிட்டுவிட்டன, மேலும் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கான சேர்க்கை நடைமுறைகளும் தொடங்கியுள்ளன, இது சி.பி.எஸ்.இ மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இப்பிரச்சினையைத் தீர்க்க, சி.பி.எஸ்.இ வாரியம் சமீபத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவை (யு.ஜி.சி) அணுகியது, யு.ஜி.சி ஜூலை 13 அன்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகளின் தேதியை மனதில் வைத்து அவர்களின் சேர்க்கை காலெண்டரைத் திட்டமிடுமாறு அறிவுரை வழங்கியது.

12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவிக்கும் முன் தமிழகத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப செயல்முறை மூடப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய சி.பி.எஸ்.இ கடந்த வாரம் தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தை அணுகியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் வட்டாரங்கள் தெரிவித்தன.

publive-image

கேரள பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான காலக்கெடு நெருங்கி வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், ஜூலை 13 ஆம் தேதி கேரளாவில் உள்ள பொதுக் கல்வித் துறைக்கு சி.பி.எஸ்.இ வாரியம் கடிதம் எழுதியது.

சேர்க்கை நடைமுறை காலக்கெடுவை நீட்டிக்க ஐ.சி.எஸ்.ஐ நிறுவனத்திற்கு சி.பி.எஸ்.இ கோரிக்கை வைத்தது ஏன் என்பது பற்றி சி.பி.எஸ்.இ அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்: “கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறுவன செயலர் நிர்வாக நுழைவுத் தேர்வில் (சி.எஸ்.இ.இ.டி) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு தேர்வில் தகுதி பெற்ற ஒரு வருடத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் மற்றும் அவர்களுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தேவை என்பதால், நாங்கள் ஐ.சி.எஸ்.ஐ.,க்கு கடிதம் எழுதினோம். இல்லையெனில், அவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டியிருக்கும்.

வாரியத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், ”இம்மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 114க்கும் மேற்பட்ட பாடங்களுக்கும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுமார் 74 பாடங்களுக்கும் தேர்வு நடத்தியுள்ளோம். 34 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் சுமார் இரண்டு கோடி விடை தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டும். முடிவுகளைத் தயாரிப்பதற்கு பல படிகள் தேவை, இதில் தகுதி அளவுகோல்கள் மற்றும் முடிவுகளின் தொகுப்பில் 100 சதவீத துல்லியம் ஆகியவை அடங்கும். முடிவுகளைத் தயாரிப்பதற்காக வாரியம் மிகப் பெரிய அளவிலான தரவுகளைக் கையாள்கிறது,” என்று கூறினார்.

CBSE ஆனது 2021-22 ஆம் ஆண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு கட்ட தேர்வுகளை நடத்தியது. அவை, கடந்த ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான முதல் பருவத் தேர்வு மற்றும் ஏப்ரலில் இரண்டாம் பருவத் தேர்வு. இரண்டு தேர்வுகளின் செயல்திறன் அடிப்படையில் இறுதி முடிவு இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ugc Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment