CBSE 12th Class Result 2019 to Declare Today: தமிழகத்தில் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மேல் படிப்பிற்கும், தோல்வியடைந்த மாணவர்கள் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கவும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
CBSE 12th Class Result 2019 to Declare Today
இந்நிலையில் தற்போது சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்புக்காக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருட சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில், 83.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in ஆகிய தளங்களை விசிட் செய்து தெரிந்துக் கொள்ளலாம்.
சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 98.2% திருவனந்தபுரம், 92.93% சென்னை, 91.87% டெல்லி ஆகிய மண்டலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கிறது.
இத்தேர்வை மொத்தம் 13 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தார்கள். கடந்த வருடம் போல இந்த வருடமும் சி.பி.எஸ்.இ-யுடன் இணைந்து மைக்ரோசாஃப்ட், மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் ஃபோனுக்கு தேர்வு முடிவுகளை அனுப்புகிறது.
அதனால் இணையதள வசதியில்லாத மாணவர்களும் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
CBSE Board 12th Result 2019: தேர்வு முடிவை எப்படி தெரிந்துக் கொள்வது?
சி.பி.எஸ்.இ-யின் அதிகாரப்பூர்வ பக்கங்களான cbse.nic.in, cbseresults.nic.in ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விசிட் செய்யவும்.
’டவுன்லோடு ரிசல்ட் லிங்க்’ என்பதை க்ளிக் செய்யவும்.
பதிவெண்ணை குறிப்பிடவும்.
இப்போது உங்களது தேர்வு முடிவு, திரையில் தோன்றும்.
அதனை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.