கடும் வெயில் காரணமாக பெற்றோர்கள் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததால், சி.பி.எஸ்.இ பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ பள்ளிகள் ஒரு மாத கோடை விடுமுறைக்குப் பிறகு தொடங்கத் தயாராகி வருகின்றன. பெரும்பாலான பள்ளிகள் ஜூன் 12 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க திட்டமிட்டுள்ளன. முன்னதாக, பெரும்பாலான பள்ளிகள் 6 ஆம் வகுப்புகளுக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதிக்குள் பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருந்தன, ஆனால் பெற்றோர்களின் கோரிக்கையை அடுத்து மற்றும் வானிலை நிலவரத்தை கருத்தில் கொண்டு, பள்ளிகள் மீண்டும் ஜூன் 12 அன்று திறக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: NEET UG 2023: கடந்த 5 ஆண்டுகளில் நீட் தேர்வு டாப் மதிப்பெண் என்ன?
முந்தைய ஆண்டுகளில், ஒவ்வொரு தொகுதி மாணவர்களுக்கு வேறு வேறு நாட்களில், அதாவது 10 நாட்கள் இடைவெளியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பெரும்பாலான பள்ளிகள் முன் தொடக்கப் பிரிவைத் தவிர அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே நேரத்தில் திறக்கப்படுகின்றன. அதேநேரம், சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சில ஜூன் 5 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க திட்டமிட்டுள்ளன, மற்ற பள்ளிகள் ஜூன் 10 மற்றும் 15 க்கு இடையில் திறக்க திட்டமிட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிவடைய உள்ளதால், ஆசிரியர்கள் தங்களது பணியில் சேர்ந்து, அட்டவணையை தயார் செய்து வருகின்றனர். தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் மாற்றங்களின்படி பள்ளிகள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் மும்முரமாக உள்ளன. பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோரிடம் பள்ளி நிர்வாகங்கள் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. விடுமுறைக்குப் பிறகு மாணவர்கள் மீண்டும் சேர்வதற்கு முன், தேசிய கல்விக் கொள்கை 2020 இன் படி, தேசிய பாடத்திட்டக் கட்டமைப்புடன் இணைந்து ஆசிரியர்களுக்கான பயிற்சி அமர்வுகளை பள்ளிகள் நடத்துகின்றன.
”திறன் மேம்பாடு நடவடிக்கைகளுக்காக ஆசிரியர்களுக்கு கணிசமான நேரம் வழங்கப்பட வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள்கையின் படி பாடத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என்றும், கலை, விளையாட்டு மற்றும் பிற பாடங்களின் ஒருங்கிணைப்பு பற்றிய அறிவைப் பெற வேண்டும் என்றும் நாங்கள் உணர்ந்ததால், அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 15 அன்று பள்ளியை மீண்டும் திறக்க உள்ளோம். பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதிகள் நெருங்கி வருவதால், கல்வி முறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகள் வழிகாட்டுதல் அமர்வுகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கை -2020 இன் படி மாற்றங்கள் முதல் மாணவர்களின் ஆரோக்கியம் வரை பல்வேறு தலைப்புகளில் பெற்றோருக்கு ஒரு நோக்குநிலையையும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்று சில தனியார் பள்ளி முதல்வர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.