/indian-express-tamil/media/media_files/2025/09/16/cbse-express-photo-by-kamleshwar-singh-1-2025-09-16-14-13-11.webp)
விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும், அறிவியல் ஒலிம்பியாட்களில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் கல்வி என்பது ஒரு தடையாக இருக்கக் கூடாது. அதை மனதில் வைத்து, சி.பி.எஸ்.சி (CBSE) வாரியம் ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது, பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
2026 ஆம் ஆண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களில், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலோ அல்லது சர்வதேச ஒலிம்பியாட்களிலோ இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வுகள் நடத்தப்படும். இந்த சலுகை ஏற்கனவே 2018-ல் விளையாட்டு வீரர்களுக்கும், 2020-ல் ஒலிம்பியாட் மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, அது இன்னும் விரிவாகவும், தெளிவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு மாணவர்கள்: 10-ஆம் வகுப்புக்கு இப்போது புதிய இரு தேர்வு முறை (பிப்ரவரி மற்றும் மே) நடைமுறையில் உள்ளது. இதில் விளையாட்டு வீரர்கள் மே மாதத்தில் நடக்கும் இரண்டாவது சுழற்சித் தேர்வுகளில் மட்டுமே சிறப்புத் தேர்வு எழுத முடியும். பிப்ரவரி மாதத் தேர்வுகளுக்கு இந்த சலுகை பொருந்தாது.
12-ஆம் வகுப்பு மாணவர்கள்: 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேதிகளும், அவர்கள் பங்கேற்கும் முக்கிய நிகழ்வுகளும் ஒரே நாளில் வந்தால், அவர்களுக்குத் தேர்வுகள் முடிந்த 15 நாட்களுக்குள் மீண்டும் தேர்வு நடத்தப்படும்.
அங்கீகாரம் முக்கியம்: இந்த சலுகையைப் பெற, மாணவர்கள் பங்கேற்கும் போட்டிகள் SAI (இந்திய விளையாட்டு ஆணையம்), BCCI (இந்திய கிரிக்கெட் வாரியம்), அல்லது HBCSE (ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம்) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வெறும் பயிற்சி முகாம்களுக்கோ, தேர்வு முகாம்களுக்கோ இந்த சலுகை பொருந்தாது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை மிகவும் எளிதானது:
1. மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் டிசம்பர் 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
2. விண்ணப்பத்துடன் பள்ளிப் பரிந்துரை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெற்ற பங்கேற்பு சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
3. மண்டல அலுவலகம் இந்த விண்ணப்பங்களை டிசம்பர் 30-க்குள் அங்கீகரிக்கும்.
4. சிறப்புத் தேர்வுகள் பொதுத் தேர்வுகள் முடிந்த 15 நாட்களுக்குள் நடத்தப்படும்.
கவனிக்க வேண்டியவை:
1. இந்தச் சலுகை சப்ளிமெண்டரி தேர்வுகளுக்குப் பொருந்தாது.
2. அதேபோல், ப்ராக்டிகல் அல்லது ப்ராஜெக்ட் வேலைகளுக்கு சிறப்புத் தேர்வு கிடையாது. ஏனென்றால், பள்ளிகளே அவற்றின் தேதிகளை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
3. போலியான தகவல்கள் அளித்தால், விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதுடன், கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
சிபிஎஸ்சி-யின் இந்த நடவடிக்கை, மாணவர்களின் கல்வி மற்றும் இதர திறன்களுக்கு சம முக்கியத்துவம் அளிக்கும் ஒரு நல்ல முயற்சியாகக் கருதப்படுகிறது. இது, எதிர்காலத்தில் இன்னும் பல மாணவர்கள் விளையாட்டு மற்றும் அறிவியல் துறைகளில் சாதிக்க ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us