"இயற்பியலை விட ஈசி; அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க நேரமில்லை": சி.பி.எஸ்.இ கணிதத் தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து
இன்று நடைபெற்ற சி.பி.எஸ்.இ கணிதத் தேர்வு குறித்து மாணவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, இயற்பியல் தேர்வை விட சற்று ஈசியாக இருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இன்றைய (மார்ச் 8) தினம் நடைபெற்ற சி.பி.எஸ்.இ கணிதத் தேர்வுகள் ஆவரேஜாக இருந்ததாக மாணவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
Advertisment
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ கல்வித் திட்டத்தின் கீழ் தற்போது 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், இன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை கணிதத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு குறித்து மாணவர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
அதன்படி, "கணிதத் தேர்வை எழுதி முடிப்பதற்கு நேரம் போதவில்லை. ஒரு மார்க் கேள்விகளும் கணக்கு போட்டு பார்க்கும் வகையில் தான் இருந்தது. இதனால் நிறைய நேரம் போய் விட்டது. குறிப்பிட்ட, நேரத்திற்குள் தேர்வை முடிக்க முடியவில்லை" என ஒரு மாணவர் தெரிவித்துள்ளார்.
மேலும், "கணிதத் தேர்வை முழுவதுமாக முடிக்க நேரம் இல்லை. இயற்பியலுடன் ஒப்பிடும் போது இந்த தேர்வு சற்று ஈசியாக இருந்தது. இதற்கு முன்னர் நடந்த தேர்வுகளில் இடம்பெற்றிருந்த கேள்விகளையும் கேட்டிருந்தனர்" என்று 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
இதனிடையே, "தேர்வை முடிக்க நேரமின்மையால், எழுதிய பதில்களை சரிபார்க்க முடியவில்லை. மிகக் கடினமான தேர்வு எனக் கூற முடியாது. தெரிந்த பதில்களையே எழுதுவதற்கு நேரமில்லை" என்று ஒரு மாணவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இதன் மூலம் இதற்கு முன்னர் நடைபெற்ற இயற்பியல் மற்றும் வேதியியல் தேர்வுகளை ஒப்பிடும் போது இந்த கணிதத் தேர்வு சற்று ஈசியாக இருந்ததை உணர முடிகிறது. எனினும், அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க நேரம் இல்லாமல் மாணவர்கள் திணறியுள்ளனர்.
தேர்வு எழுதிய பெரும்பாலான சி.பி.எஸ்.இ மாணவர்கள், கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர விரும்புவதாக கூறியுள்ளனர்.