CBSE Board Exams: சிபிஎஸ்இ தேர்வு புதிய மதிப்பீட்டு முறை நன்மை பயக்குமா?

CBSE Board Exams: New assessment pattern has little scope for subjectivity and creativity, say school principals: சிபிஎஸ்இ புதிய தேர்வுமுறை; மாணவர்களின் கற்பனைத்திறன் பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் கவலை; போட்டித் தேர்வு ஏற்பாடுகள் பாதிக்கப்படுவதாக மாணவர்கள் கவலை

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அக்டோபர் 18 அன்று, 2022 ஆம் ஆண்டு பருவம் -1 (Term – 1) தேர்வுகளுக்கான தேதியை அறிவித்தது. அதன்படி, 10 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நவம்பர் 30 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு தேர்வு டிசம்பர் 1 ஆம் தேதியும் தொடங்கும்.

எல்லா முயற்சிகளும் இருந்தபோதிலும், புதிய மதிப்பீட்டு முறையில் மாணவர்களின் செயல்திறனைப் பற்றிய மதிப்பீட்டில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் தொடர்ந்து குழப்பமடைந்து வருகின்றனர். புதிய திட்டத்தின்படி, தேர்வுகளுக்கான கால அளவு 90 நிமிடங்கள் மட்டுமே மற்றும் கொள்குறிவகை கேள்விகளாக (MCQ) இருக்கும். இந்த ஆண்டு, பாடத்திட்டமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தேர்வின் வாசிப்பு நேரமும் 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பருவத் தேர்வு மார்ச்-ஏப்ரல் 2022 இல் நடத்தப்படும். அந்த நேரத்தில் நாட்டில் கொரோனா சூழ்நிலையைப் பொறுத்து, அது விரிவான எழுத்து தேர்வு (Subjective) அல்லது கொள்குறி வகை வினாக்கள் (Objective) அடங்கிய தேர்வாக இருக்கும்.

மேற்கு வங்கத்தின் ஹூக்லி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா அகாடமியின் ஆசிரியர் முக்தி ஷா, மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறார். மேலும், “புதிய முறையின் அடிப்படையில் நாங்கள் இரண்டு தேர்வுகளை நடத்தியுள்ளோம் ஆனால் ஒரே சவால் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. மாணவர்கள் புதிய திட்டத்திற்கு ஆஃப்லைன் முறையில் பழகவில்லை,” என்றும் அவர் indianexpress.com இடம் கூறினார்.

பத்தாம் வகுப்பு படிக்கும் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அடுத்த மாதம் தனது பள்ளியில் இருந்து முதல்நிலைத் (Term – 1) தேர்வில் பங்கேற்கின்றனர். MCQ வகை வினாக்களுக்கு கருத்துக்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதால் மாணவர்கள் விரிவான விடையளித்தல் கேள்விகளுக்குத் தயாராவது போல் தலைப்புகளைப் பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சிபிஎஸ்இ விரிவான தேர்வு அல்லது MCQ வகை தேர்வுகளுக்கு இடையே மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அளித்திருக்க வேண்டும் என டிபிஎஸ்-ஆர்என்இ காஜியாபாத்-இன் முதல்வர் பல்லவி உபாத்யாய் indianepress.com இடம் கூறினார்.

“மாணவர்கள் நீண்ட காலமாக வீட்டிலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள் மற்றும் MCQ வகை கேள்விகள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் ஒரு வசதியான மதிப்பீட்டு முறையாகத் தோன்றுகின்றன. ஆனால், தேர்வு முறையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தால் மாணவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். தவிர, மதிப்பீடு மற்றும் மதிப்பெண் திட்டம் கவலைக்குரியது, ஏனென்றால் மாணவர்கள் விடைகளின் படிகள் மற்றும் முக்கிய வார்த்தைகளுக்கு மதிப்பெண்கள் பெறும் விரிவான விடையத்தல் தேர்வுகளின் பதில்களைப் போலன்றி, MCQ வகை கேள்விகளுக்கு தவறான பதில் அல்லது சரியான பதில் மட்டுமே உள்ளன. நடுவில் எதற்கும் வாய்ப்பில்லை, “என்று பல்லவி கூறினார்.

பள்ளிகள் அக்டோபர் 18 அன்று முதல் ப்ரீ-போர்டு தேர்வுகளை முடித்தது, அதே வடிவமானது 9, 11 வகுப்புகளுக்கும் “ஆரம்பகால பழக்கவழக்கத்தின்” வழிமுறையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

“பருவம் -1 தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பே நாங்கள் இரண்டாவது ப்ரீ-போர்டு தேர்வுகளை நடத்தலாம், ஏனெனில் பல மாணவர்கள் இன்னும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர், ஆனால் இரண்டாவது தவணை காலம் குறைவாக இருப்பதையும், பாடத்திட்டம் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதிலும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும், ” என்று பல்லவி கூறினார்.

நொய்டாவின் பிரிவு 28, விஸ்வ பாரதி பப்ளிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் லக்ஷய் சிங் காஷ்யப், பாடத்திட்டத்தை இரண்டாகப் பிரிப்பது வித்தியாசமானது மற்றும், இது மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கூறினார்.

“இந்த முறை முற்றிலும் புதியது மற்றும் MCQ- அடிப்படையிலான தேர்வுகளில் மாணவர்கள் சவால்களை எதிர்கொள்ளாமல் இருக்கலாம் ஆனால் நம்மில் பெரும்பாலோர் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறோம். முன்னதாக, ஒரு முழுமையான பாடத்திட்டத்துடன் கூடிய வாரிய தேர்வுகள் ஒரு திருத்தல் அமர்வாக செயல்படும். ஆனால் இப்போது நாம் நுழைவுத் தேர்வுகளுக்கு முன் எல்லாவற்றையும் திரும்ப படிக்க கூடுதல் நேரம் செலவிட வேண்டும். நான் தற்போது பள்ளியில் ப்ரீ-போர்டு தேர்வுகளை எழுதுகிறேன். இதனால், எனது பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை, இது ஒரு பின்னடைவை உருவாக்குகிறது மற்றும் எனது தயாரிப்புகளை பாதிக்கும் என்று லக்ஷய் கூறினார். லக்‌ஷய் BTech படிப்பில் சேர விரும்புவதால், JEE மெயின் 2022 க்கு தயாராகி வருகிறார்.

பதினாறு வயதான அபய் பாட்டீல் கர்நாடகாவின் விஜயபூர் மாவட்டத்தில் உள்ள ஜெயின் பப்ளிக் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் நம்பிக்கை கொண்டவர் மற்றும் யூடியூப் வீடியோக்கள், வகுப்பறை குறிப்புகள் மற்றும் சிபிஎஸ்இ மாதிரி தாள்கள் மூலம் பயிற்சி செய்து வருகிறார்.

“நான் 11 ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் சேர விரும்புகிறேன். எனவே, நான் ஒரு நல்ல மதிப்பெண் பெற வேண்டும். இறுதி முடிவை தயாரிக்க அனைத்து மதிப்பெண்களும் சேர்க்கப்பட்ட கல்வி அமர்வின் முடிவில் ஒரு ஆச்சரியத்தைப் பெறுவதை விட தற்போதைய திட்டம் சிறந்தது. இந்த தேர்வுகள் எங்கள் முடிவின் தலைவிதியை தீர்மானிக்கும் என்பதை அறிந்தும், அதற்கேற்ப எங்களது ஆற்றலை முதலீடு செய்வதற்கான தெளிவு எங்களுக்கு உள்ளது, ”என்று அபய் indianexpress.com இடம் கூறினார்.

எம்ஆர்ஜி பள்ளியின் முதல்வர், ரோகிணி, அன்ஷு மிட்டல், புதிய வடிவத்தைப் பற்றி கவலைப்படுகிறார், மேலும், இது மாணவர்களின் படைப்பாற்றலைத் தடுத்து, விரிவான விடையளித்தலுக்கு இடமளிக்காது என்கிறார்.

“கலப்பின கற்றல் முறையில், பள்ளிகளில் தனிப்பட்ட வருகை சுமார் 50 சதவீதம் மட்டுமே. மாதிரித் தேர்வுகள், கேள்வி தொகுப்புகளின் உதவியுடன் மாணவர்களைப் பழக்கப்படுத்த பள்ளிகள் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டாலும், பள்ளியின் தலைவராக நான் மிகவும் கவலைப்படுகிறேன். MCQ அடிப்படையிலான கேள்விகள் எளிதானதாகத் தோன்றுகின்றன, மேலும் மாணவர்கள் விரிவான தேர்வுகளை முயற்சிக்கும் போது அவர்களின் அணுகுமுறை சாதாரணமாக இருக்கலாம். எனவே, முடிவுகளால் நாங்கள் ஆச்சரியப்படுவோம் என்று எதிர்பார்க்கலாம், ”என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cbse term 1 board exams new assessment pattern provides minimal scope for subjectivity and creativity say school principals

Next Story
யமஹா மோட்டார் நிறுவனத்தில் வேலை செய்ய ஆசையா? வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!யமஹா மோட்டார்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com