10, 12ம் வகுப்பு பிராக்டிகல் தேர்வு – சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

CBSE Class 10th, 12th Exams: பிராக்டிகல் தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சாம்பிள் பேப்பர்களை மட்டும் பார்க்குமாறும், பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

CBSE 10th & 12th Exam Tips: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிராக்டிகல் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ ( மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE)) 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பிராக்டிகல் தேர்வுகள், 2020 ஜனவரி 1ம் தேதியில் இருந்து பிப்ரவரி 7ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

முக்கிய அறிவிப்பு : பிராக்டிகல் தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சாம்பிள் பேப்பர்களை மட்டும் பார்க்குமாறும், பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிராக்டிகல் தேர்வு நடைமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த சாம்பிள் பேப்பர்களை கடந்த செப்டம்பர் மாதம் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சாம்பிள் பேப்பர்களையே, மாணவர்கள் பிராக்டிகல் தேர்வுக்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சாம்பிள் பேப்பர்களின் அடிப்படையிலேயே, pre-board examinationsகளை நடத்த, பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

10,12 வகுப்பு பிராக்டிக்கல் தேர்வு தேதியை வெளியிட்டது சிபிஎஸ்இ

டில்லியில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு pre-board examinationsகள் டிசம்பர் 16ம் தேதி முதல் துவங்க உள்ளது.
pre-board examinationsகளுக்கு, இந்த சாம்பிள் பேப்பர் நடைமுறைகளையை பின்பற்றினால், மாணவர்களுக்கு போர்டு தேர்வுகளின் போது ஏற்படும் மன பதற்றத்தை தணிக்க உதவும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிராக்டிகல் தேர்வு மற்றும் புராஜெக்ட் அசெஸ்மெண்ட் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். இந்த தேர்வுகளின் போது இன்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல் எக்சாமினர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். எக்ஸ்டர்னல் எக்சாமினரை, சிபிஎஸ்இ தேர்ந்தெடுத்து அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cbse to class 10th 12th students follow sample papers not pattern given in curriculum

Next Story
TNPSC Recruitment 2018: தமிழ்நாடு சிறைத்துறையில் வேலை.. விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம்!NPCIL Recruitment 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com