சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் சான்றிதழ் ஒரே ஆவணமாகிறது

2019-ம் ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலும், சான்றிதழும் ஒன்றாக வழங்கப்படும்.

CBSE Class 12th Result, CBSE 12th Result 2019
cbse board exams, சிபிஎஸ்இ பொதுத்தேர்வு

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழை ஒரே ஆவணமாக வழங்கப்பட இருக்கிறது.

வாரியத்தின் தேர்வுக் குழுவால் எடுக்கப்பட்ட இந்த முடிவு, அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.

“2019-ம் ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலும், சான்றிதழும் ஒன்றாக வழங்கப்படும்” என்றார் மூத்த அதிகாரி ஒருவர்.

இந்த ஆவணம் சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும். மாணவர்கள் தங்களின் தேவையை தெரியப்படுத்தி இதன் நகலை வாரியத்திடம் பெற்றுக் கொள்ளலாம்.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போதும் போல், மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ் தனித்தனியாக வழங்கப்படும்.

மேம்பட்ட சோதனைக்காக (Improvement examination) தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அந்தப் பாடத்தின் மதிப்பெண் மட்டும் அறிக்கையாக வழங்கப்படும். தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.

 

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cbse to issue single document for 10th students

Next Story
TN ESLC 2019 results: இ.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியீடுIBPS Clerk mains result
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com