இந்தியாவின் ஆர்.டி.இ சட்டத்தின் படி, ஒருவர் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளில் ஆசிரியராக வேண்டும் என்றால் அவர் கட்டாயம் தகுதி தேர்வில் தேர்சிப்பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆயரியர் தகுதி தேர்வை சமந்தப்பட்ட மாநிலங்களும், மத்திய இடைக் கல்வி வாரியமான சிபிஎஸ்சி யும் நடத்தி வருகின்றன. சிபிஎஸ்சி நடத்தும் தேர்வின் பெயர் சிடெட் (CTET) என்று அழைகப்படுகிறது. மாநில அரசு நடத்தும் தேர்வின் பெயர் டெட்(TET) என்றும் அழைக்கப்படுகிறது.
வரும் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சிடெட் ) அட்மிட் கார்டை அடுத்த வாரத்திற்குள் வெளியிட மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்டமிட்டுள்ளது. .
ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 டிசம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை நடத்தபடுகிறது. அன்று காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை முதல் தாள் தேர்வு நடைபெறும், மதியம் 2 மணி முதல் மாலை 4:30 மணி இரண்டாம் தாளுக்கான தேர்வு நடத்தப்படும். தேர்வர்கள் தேர்வெழுதும் இடங்கள் பற்றிய முழு விவரம் அடுத்த வாரம் வெளியாகும் அட்மிட் கார்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் காலையில் நடக்கும் முதல் தாள் தேர்வை எழுத வேண்டும். மதியம் நடக்கும் இரண்டாம் தாளில் தேர்வு பெறுபவர்கள் ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் தகுதியடைவார்கள். இந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நாடு முழுவதும் 110 நகரங்களில் 20 மொழிகளில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் தாளில் சுமார் 30 கேள்விகள். இதில் மொழி I, மொழி II, கணிதம், சுற்றுச்சூழல் ஆய்வுகள், குழந்தை வளர்ச்சி, கற்பித்தல் போன்றவைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் தாளில் இந்த 30 கேள்விகளைத் தாண்டி, கணிதம், அறிவியல், சமூக ஆய்வுகள் / சமூக அறிவியல் ஆகியவற்றிலிருந்து கூடுதல் 60 கேள்விகள் கேட்கப்படும்.
அதையும் தாண்டி, சிடெட் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மாநில மற்றும் மத்திய அரசு சார்ந்த (கே.வி.எஸ், என்.வி.எஸ், மத்திய திபெத்திய பள்ளி) பள்ளிகளில் ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு இருப்பதால் சிடெட் தேர்வுகளுக்கே முன்னுரிமைக் கொடுக்கின்றனர். முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகள் வரை மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்) சான்றிதழ் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.