முக்கியமான விஷயங்களை மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தெரிவிப்பதற்காக, ‘ஷிக்ஷா வாணி’ என்ற செயலியை சமீபத்தில் சி.பி.எஸ்.இ அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது சி.பி.எஸ்.இ நிர்வாகம். ”புதுப்பிக்கப்பட்ட தகவல்கள், எளிமையாகக் கிடைக்கும் கல்வி ஆவணங்கள் ஆகியவை மாணவர்களை மேம்படுத்த உதவுகிறது. இதனால், சி.பி.எஸ்.இ குழு அதன் பயனாளர்களுடன் தொடர்பில் இருக்க தொடர்ந்து முயற்சிக்கிறது.
பொருத்தமான மற்றும் யூசர் ஃப்ரெண்ட்லி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் மாணவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என குழுவும் நம்புகிறது.
அதோடு 10, 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பீடு தொடர்பான முதல் செயல்முறை ’போட்காஸ்ட்’ இங்கே பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இந்த போட்காஸ்ட் கூகுள் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு மொபைலில் மட்டுமே இருக்கும்.
இதை பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்த பின், ஆடியோ - வீடியோவை உடனுக்குடன் மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.