மத்திய இடைநிலை கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE)), பள்ளிகளில் சிபிஎஸ்இ வரையறுத்துள்ள பாடங்களை மட்டுமே மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டும். இந்த நிலையை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதிலிருந்து தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என்று எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 9ம் வகுப்பு ( Skill) மற்றும் 11ம் வகுப்பு (Academic & Skill)களில், சிபிஎஸ்இ அங்கீகரித்துள்ள பாடங்களை மட்டுமே மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் மீது கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மாணவர்கள், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்படாமல், தகுதியற்றவர்களாக கருதப்படுவர்.
சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மீது பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
2019-20ம் கல்வியாண்டில் மேல்நிலை ( 9 மற்றும் 10ம் வகுப்பு ) மற்றும் மூத்தமேல்நிலை (11 மற்றும் 12ம் வகுப்பு) வகுப்புகளுக்கான சிபிஎஸ்இயால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் இந்த இணையதளத்தில் http://cbseacademic.nic.in/curriculum.html வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிகள், தங்கள் மாணவர்ளுக்கு பாடத்திட்டங்களை துவங்கும் முன், இந்த பட்டியலை ஒருமுறை சரிபார்த்து துவங்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.