மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தனது செயல்பாடுகள் தொடர்பான தவறான தகவல்களைப் பரப்புவதற்கு எதிராக புதிய ஆலோசனை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், மாதிரி வினாத்தாள்கள், பாடத்திட்டம், சிபிஎஸ்இ வளங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய காலாவதியான இணைப்புகள் மற்றும் சரிபார்க்கப்படாத செய்திகளை பரப்பும் ஆன்லைன் போர்ட்டல்கள் மற்றும் இணையதளங்களுக்கு எதிராக இந்த அறிக்கை வந்துள்ளது.
முன்னதாக, 2024-25 அமர்வுக்கான புதுப்பிக்கப்பட்ட விவரங்களை வழங்குவதாகக் கூறி, பல இணையதளங்கள் மற்றும் ஆன்லைன் போர்ட்டல்கள் தவறான தகவல்களை விநியோகிப்பதை சிபிஎஸ்இ கவனித்துள்ளது.
மேலும், "பொதுமக்களின் நலன் கருதி, அங்கீகரிக்கப்படாத ஆதாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தவறாக வழிநடத்தும் மற்றும் பள்ளிகள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ சிபிஎஸ்இ ஆதாரங்களின் பட்டியல்
தவறான தகவல்களின் பரவலை எதிர்த்துப் போராட, சிபிஎஸ்இ துல்லியமான மற்றும் தற்போதைய தகவல்களைப் பெறக்கூடிய அதிகாரப்பூர்வ ஆதாரங்களை முன்னிலைப்படுத்தியுள்ளது.
எனவே, சி.பி.எஸ்.இ தொடர்பான பல்வேறு அம்சங்களைப் பற்றிய குறிப்பிட்ட தகவலுக்கு, பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் மைக்ரோசைட்டுகளைப் பார்க்க வேண்டும்:
- CBSE அகாடமிக் (https://www.cbseacademic.nic.in/): மாதிரி வினாத்தாள்கள், பாடங்கள், பாடத்திட்டங்கள் மற்றும் தொடர்புடைய ஆதாரங்கள், வெளியீடுகள், திட்டங்கள், SAFAL போன்றவை உட்பட கல்வி மற்றும் திறன் கல்வி.
- CBSE முடிவுகள் (https://results.cbse.nic.in/): CBSE தேர்வு முடிவுகள்
- CTET (https://ctet.nic.in/): மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு
பிரஷிக்ஷன் திரிவேணி (https://cbseit.in/cbse/2022/ET/frmListing): பயிற்சி தொடர்பான நடவடிக்கைகள்
- CBSE SARAS (https://saras.cbse.gov.in/SARAS): ஒருங்கிணைந்த மின் இணைப்பு அமைப்பு
பரீக்ஷா சங்கம் (https://parikshasangam.cbse.gov.in/ps/): தேர்வு தொடர்பான நடவடிக்கைகள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“