சிபிஎஸ்இ போர்டு தேர்வு 2020: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த 2 மாதங்களில் 2020 மற்றும் 2021 வாரியத் தேர்வுகளுக்கான நடைமுறைகளில் பல மாற்றங்களை அறிவித்திருந்தது .
அதில் குறிப்பிடும் வகையாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்க்கு புதிதாய் அமல்படுத்தவிருக்கும் நடைமுறைத் (practical) தேர்வு பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே காணலாம்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் போன்ற பெரும்பாலான தேர்வு பாடங்ககள் இனி 80 + 20 மதிப்பெண்களாக பிரிக்கப்பட்டுள்ளன
இதில் அந்த 20 மதிப்பெண்கள் அந்தந்த பள்ளிகளில் நடைமுறைத் தேர்வின் மூலம் உள் மதிப்பீட்டால் நிரப்பப்படும் . பள்ளிக்குள் நடக்கும் இந்த நடைமுறைத் தேர்வுக்கு வெளி எக்ஸ்சாமினர் யாரும் வரமாட்டார்கள் என்பதை சிபிஎஸ்இ அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பைப் பொறுத்தவரை இரண்டு வகையான பிரேக் அப்கள் உள்ளன . 70 + 30 பாடத் தேர்வு என்ற ரீதியிலும், 80 + 20 கொண்ட பாடத் தேர்வு என்ற வகையிலும் பிரித்துள்ளது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ
70 + 30 என்ற இந்த வகையான பாடத் தேர்வுக்கு - அந்தந்த பள்ளிகளில் நடைமுறை தேர்வுகள் நடத்தப்படும். அந்த நடைமுறைத் தேர்வுக்கு வெளிப்புற எக்ஸ்சாமினர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால், கணிதம் போன்ற அனைத்து பாடங்களுக்கும் வரும் தேர்வில் நடைமுறைத் தேர்வு இருப்பதால் வெளிப்புற எக்ஸ்சாமினர்கள் நியமிக்கும் முடிவை சிபிஎஸ்இ எடுக்குமா? என்ற கேள்வியும் நிலவி வருகிறது.
இது குறித்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இன்னும் எந்த முடிவையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இது குறித்த தகவல்களுக்கு வரும் நாட்களில் எங்கள் இணையதளத்தின் பக்கங்களை பின்தொடருங்கள்.