தேர்வு முறையை மேம்படுத்தும் முயற்சியாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களில் 'தோல்வியுற்றவர்கள்' என்ற சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க திட்டமிட்டுள்ளது.
ஒரு தேர்வின் மூலம் மாணவரின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது. இத்தகைய வார்த்தை மனநலத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் . தேர்வில் யாரும் 'தோல்வியுற்றவர்கள்' என்று அறிவிக்கப்படாத சூழல் வரவேண்டும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறியுள்ளார்.
தோல்வியுற்றவர்கள் மாற்றாக சிறந்த சொற்களை பரிந்துரைக்க சன்யம் பரத்வாஜின் கீழ் சிபிஎஸ்இ ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த குழு நாடு முழுவதும் உள்ள பள்ளி முதல்வர்கள், கல்வியாளர்களிடமிருந்து பரிந்துரைகளைக் கேட்கும். பின்னூட்டத்தைத் தொடர்ந்து, ஒரு குறிப்பிட்ட நேர்முறையான அர்த்தங்களைக் கொண்ட சொற்களை இந்த குழு பரிந்துரைக்கும்,”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தேர்வு மதிப்பெண்களில் ‘தோல்வி’ மற்றும் ‘கம்பார்ட்மென்ட்’ போன்ற சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்று திட்டமிட்டிருந்தாலும், சிபிஎஸ்சி தேர்வு வாரியம் இன்னும் இதற்கான அறிவிப்பை முழுமையாக தெரிவிக்கவில்லை.
அடுத்த ஆண்டு முதல், தேர்வு மதிப்பெண்களில் இந்த சொற்கள் கட்டாயம் இருக்காது' என்று சிபிஎஸ்சி வாரிய கன்ட்ரோலர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு, 12 தேர்வுகளுக்கு மொத்தம் 30,96,771 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 31.14 லட்சத்துக்கு மேல் இருந்தது.