முதுகலை மருத்துவ பட்டம் பெறுவதற்குமுன்பு மாணவர்கள் கட்டாயமாக மூன்று மாதங்கள் மாவட்ட மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆளுநர் குழு எடுத்த முடிவிற்கு, வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
அரசியலமைப்பிலிலுள்ள பிரிவு 263 ன் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது தான் இந்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல கவுன்சில். சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு ஆலோசனை வழங்கும் மேன்மைபொருந்திய அமைப்பாக கருதப்படுகிறது
கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: “மருத்துவக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தரமான மற்றும் மேம்பட்ட சுகாதார சேவையை வழங்குவதற்காக நாட்டில் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், எம்.சி.ஐ விதிமுறைகள் மூலம் வகுக்கப்பட்ட ரெசிடென்சி மாவட்ட திட்டத்தை செயல்படுவதற்கும் இந்த கவுன்சில் ஒரு மனதாய் முடிவெடுத்துள்ளது.
பிரதமர் மோடி - ஜீ ஜிங்பின் சந்திப்பு
கட்டாயமாக மூன்று மாதங்கள் மாவட்ட மருத்துவமனையில் பணி அமர்த்தும் திட்டம், வரும் வருடங்களில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும், மூன்று மாதங்கள் பணி செய்யாதவர்கள் மருத்துவ பட்டம் வாங்க முடியாத சூழல்வரும் என்று குடும்ப நல கவுன்சிலில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய சுகாதார அமைச்சக அதிகாரி இது குறித்து தெரிவிக்கையில், " மூன்று மாதக் கட்டாய திட்டத்திற்கு அரசு ஆதரவாக உள்ளது, ஆனால் அது எப்போது நிகழும், முதுகலை மருத்துவ படிப்பில் எந்த கட்டத்தில் இதை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முழுமையான செயல்பாட்டினை மாநில அரசாங்கத்தோடு பேசிதான் முடிவு செய்ய வேண்டும், " என்று தெரிவித்தார்.
உடல்நலம், சுகாதாரம் மாநிலப் பட்டியலில் உள்ளது. ஆனால், மருத்துவக் கல்வி இருதரப்பு பட்டியலில் உள்ளது. என்னதான், இந்திய மருத்துவ கவுன்சில் கொள்கையை வகுத்தாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசாங்கங்களிடமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் ஏற்கனவே யுஜி படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு ஓராண்டு கிராமப்புறங்களில் பணி செய்வதை கட்டாயமாக்கியிருந்தன. ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் கிராமப்புறங்களில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு யு.ஜி மற்றும் பி.ஜி மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு செய்யும் திட்டத்தை கொண்டுவந்தது.
உத்திர பிரதேச மாநிலம் யுஜி மற்றும் பிஜி மருத்துவ மாணவர்களுக்கு கட்டாய கிராம சேவை பத்திரத்தை அறிமுகப்படுத்தியிருந்தது .
ஒரு வருட கிராமப்புற மருத்துவ சேவையை அமல்படுத்துவதற்கான தெலுங்கானாவின் முடிவு கடினமான எதிர்ப்புக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .