Advertisment

Central Electronics Limited recruitment 2019: இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு 8.35 லட்சம் சம்பளத்தில் வேலை!

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வருடத்திற்கு 8.35 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும். 

author-image
WebDesk
Mar 19, 2019 19:17 IST
New Update
SBI Clerk Exam, last Date to apply SBI Clerk Exam

Central Electronics Limited recruitment 2019: சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.

Advertisment

கேட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து, விண்ணப்பதாரர்கள் இதற்கு celindia.co.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மார்ச் 17-ம் தேதியே இதற்கான முன்பதிவுகள் துவங்கி விட்டன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வருடத்திற்கு 8.35 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும்.

தகுதி

எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் ஆகியப் பிரிவுகளில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றவர்கள்.

வயது வரம்பு 

டிசம்பர் 31, 2018-ன் படி 27 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள்.

தேவையான சான்றிதழ்கள் 

கேட் மதிப்பெண் பட்டியல்

மதிப்பெண்ணுடன் கூடிய டிகிரி சான்றிதழ்

சாதி/மாற்றுத்திறனாளி சான்றிதழ்

அனுபவ சான்றிதழ்

முக்கியத் தேதிகள்

முன்பதிவு துவங்கும் நாள் - மார்ச் 17, 2019

முன்பதிவு செய்ய இறுதி நாள் - ஏப்ரல் 16, 2019

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் celindia.co.in  தளத்தில் அப்ளை செய்யவும்.

#Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment