/indian-express-tamil/media/media_files/2025/05/12/1BJhNxRx2u5EnIfB4FUo.jpg)
புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளான பொறியியல், கலை, அறிவியல், சட்டம் விவசாயம் மற்றும் உயிரியல் சார்ந்த பாடப் பிரிவுகளுக்கு சென்டாக் இணையதளத்தில் மாணவர்கள் இன்று முதல் வருகிற 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளான பொறியியல், கலை, அறிவியல், சட்டம் விவசாயம் மற்றும் உயிரியல் சார்ந்த பாடப் பிரிவுகளுக்கு சென்டாக் இணையதளத்தில் மாணவர்கள் இன்று முதல் வருகிற 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நீட் அல்லாத இடைநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி, மருத்துவம் சார்ந்த படிப்புகள், என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல், சட்டம், உயிரியல் பாடப்பிரிவுகளுக்கு ஆண்டுதோறும் சென்டாக் மூலம் அட்மிஷன் நடைபெறுகிறது . இதற்கு சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ் தயார் நிலையில் வைக்கும்படி சென்டாக் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது
இந்த நிலையில், 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் அல்லாத படிப்புகளுக்கானமாணவர் சேர்க்கைக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் இன்று முதல் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ்-2 தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த 8 ஆம் தேதி வெளியானது. இதேபோல், புதுவை அரசு பள்ளி மற்றும் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மூலம் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி மாணவர்களுக்கான தேர்வு முடிவு வருகிற 15 ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு பெற சென்டாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கான தகவல் கையேடு இன்று (திங்கட்கிழமை) சட்டசபை வளாகத்தில் வெளியிடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் முதலஅமைச்சர் ரங்கசாமி, கல்வித்துறைஅமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு வெளியிட்டனர்.
நீட்அல்லாத இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் 30 ஆம் தேதி வரை சென்டாக்கில் ஆன்லைன் வழியாக மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு எம்.பி.பி.எஸ். பல் மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பதிவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2025-26 கல்வியாண்டிற்கான யு.ஜி நீட் அல்லாத தொழில்முறை படிப்புககள் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் நுண்கலை படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு:
விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீட் அல்லாத UG தொழில்முறைப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு – B.Tech., B.Arch., B.Sc.(Hons), வேளாண்மை மற்றும் தோட்டக் கலை, B.V.Sc.& A.H (PY- GQ/SS &FN மட்டும்), B.Sc. (Nursing), B.P.T, B.Sc துணை மருத்துவப் படிப்புகளில் டிப்ளமோ, UG கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகள் (B.A, B.Sc., B.Com., B.B.A & B.C.A) (6 அரசு மற்றும் அரசு உதவி பெறும் சொசைட்டி கல்லூரிகளில் மட்டும்). நுண் கலை (Fine Arts) படிப்புகள் (B.P.A & B.V.A), B.Voc.AIAT மற்றும் B.A RRU அகிய படிப்புகளுக்கான விண்ணப்பத்தை www.centacpuducherry.in என்ற இணைய தளத்தில் 12.05.2025 பிற்பகல் மூன்று மணி முதல் பதிவு செய்யலாம்.
இணையதள முகவரி : www.centacpuducherry.in
விண்ணப்பம் தொடங்கும் தேதி : 12.05.2025
விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி தேதி : 31.05.2025
UG Non-NEET தொழிற்கல்வி இடங்கள் : 6,257
UG Non-NEET கலை, அறிவியல் துறை இடங்கள் : 4,320
மொத்த இடங்கள் : 10,577.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.