பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அலுவலக உதவியாளர் (துப்புரவாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 484 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Safai Karmachari cum Sub-Staff
காலியிடங்களின் எண்ணிக்கை : 484
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 31.03.2023 அன்று 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 14,500 – 28,145
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் வட்டார மொழித் தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/cbiskssnov23/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.01.2024
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினர் ரூ.850. SC/ST பிரிவினர் ரூ.175
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://centralbankofindia.co.in/sites/default/files/NOTIFICATION_RECRUITMENT_OF_SAFAI_KARMACHARI_CUM%20SUB_STAFF%20AND_OR%20SUB_STAFF%202024_25.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“