பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 5000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 230 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: EPFO நிறுவனத்தில் 2859 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிங்க!
Apprentice
காலியிடங்களின் எண்ணிக்கை : 5000
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
ஊக்கத்தொகை : ரூ. 10,000 – 15,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6412cbf5977ed17c321d25e2 என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.04.2023
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினர் ரூ.800. SC/ST பிரிவினர் ரூ.600
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.centralbankofindia.co.in/sites/default/files/Apprentice%20Notification%20.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil