தீபாவளி பண்டியை நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசின் ரயில்வே துறையில் பணியாற்றி வரும் 11.71 லட்சம் ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான சம்பளம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. இந்த பண்டிகைககாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம். இந்த வகையில், தற்போது இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பான மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷனவ், கூறுகையில், ரயல்வே துறையில் பணியாற்றி வரும் 11.71 லட்சம் பணியாளர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் தீபாவளி போனஸாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
78 நாட்கள் சம்பளம் போனஸாக வழங்குவதன் மூலம், மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ2029 கோடி செலவு ஏற்படும். வரும் அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தற்போது ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனை பாராட்டி இந்த தொகையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசின் 78 நாட்கள் சம்பளத்தை கணக்கிட்டு பார்த்தால், ரூ17951 வரை வரும். அதேபோல் கடந்த ஆண்டு 78 நாட்கள் சம்பளமாக போனஸ் வழங்கப்பட்ட நிலையில், 6வது ஊதிய கமிஷன் விதிப்படி, குருப் 4 ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக ரூ7000 வழங்கப்பட்டது. போனஸ் தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“