/tamil-ie/media/media_files/uploads/2018/01/irctc-2-pti-1-4-2.jpg)
இந்திய ரயில்வேயில் அப்ரண்டீஸ் வேலை வாய்ப்பு
இந்திய ரயில்வேயில் 2424 அப்ரண்டீஸ் பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ முடித்தவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய ரயில்வேயில் 2424 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 15.08.2024 கடைசி தேதியாகும். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 2424
வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்), டர்னர், ஃபிட்டர், எலக்ட்ரீஷியன், கணினி இயக்குபவர் / நிரல் உதவியாளர், மெஷினிஸ்ட், மெக்கானிக், கார்பெண்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ முடித்து இருக்க வேண்டும்.
வயது தகுதி: 15 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: ஐ.டி.ஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://rrccr.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.08.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://rrccr.com/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.