Advertisment

CUET UG 2024: தமிழ்நாடு மத்திய பல்கலை. மாணவர் சேர்க்கை தொடக்கம்; விண்ணப்பிப்பது எப்படி?

CUET UG 2024 தேர்வு மூலம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தொடக்கம்; ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?

author-image
WebDesk
New Update
college students cutn

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN) இளங்கலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, (CUET UG) 2024 இல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பல்வேறு ஒருங்கிணைந்த முதுகலை மற்றும் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறையைத் தொடங்கியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக இணையதளத்தில் கிடைக்கும் ஆன்லைன் சேர்க்கை போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் - cutncuet.samarth.edu.in. பதிவு போர்டல் ஆகஸ்ட் 12 வரை திறந்திருக்கும்.

ஆன்லைனில் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பதிவேற்றம் செய்ய தயாராக வைத்திருக்க வேண்டும்:

1. பாஸ்போர்ட் அளவு டிஜிட்டல் புகைப்படம்

2. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

3. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

4. மாற்றுச் சான்றிதழ்

5. சாதிச் சான்றிதழ் 

6. மாற்றுத் திறனாளி சான்றிதழ் (தேவைப்படின்)

7. காஷ்மீரி புலம்பெயர்ந்தோர்/ காஷ்மீரி பண்டிட்/ காஷ்மீரி இந்து குடும்பங்களுக்கான சான்றிதழ் (புலம்பெயர்ந்தோர் அல்லாதவர்கள்) காஷ்மீரி குடியேறுபவர்களுக்கான ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் (தேவைப்படின்)

8. ராணுவத்தினர் குழந்தைகளுக்கான சான்றிதழ் (தேவைப்படின்)

9. தேவையான சான்றிதழ்கள்/ ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்காததற்காக கையால் எழுதப்பட்ட உறுதிமொழி

பொது, ஓ.பி.சி (OBC (NCL)), இ.டபுள்யூ.எஸ் (EWS) பிரிவினருக்கான பதிவுக் கட்டணம் ரூ. 250. எஸ்.சி/ எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு ரூ. 150 மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

ஆன்லைன் சேர்க்கை போர்டல் மூலம் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே சேர்க்கைக்கு பரிசீலிக்கப்படுவார்கள். எந்தவொரு நெட்வொர்க் தாமதங்களுக்கும் இடையூறுகளுக்கும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது என்று பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் வழங்கப்பட்ட தகவல்கள் அவர்களின் CUET UG மதிப்பெண் அட்டையுடன் பொருந்துவதை உறுதிசெய்ய வேண்டும். முரண்பாடுகள் தகுதியிழப்புக்கு வழிவகுக்கும். கூடுதலாக, தேவையான சான்றிதழ்கள்/ஆவணங்களை பதிவேற்றத் தவறிய விண்ணப்பதாரர்கள் சாதாரண காகிதத்தில் கையால் எழுதப்பட்ட உறுதிமொழியை வழங்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

College Admission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment