/indian-express-tamil/media/media_files/n4XoidwCii4RwXLxzaQ5.jpg)
1 ஆம் வகுப்பில் சேருவதற்கான குறைந்தபட்ச வயதை ஆறு வருடங்களாக நிர்ணயிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தல்
தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமை (RTE) சட்டம், 2009 ஆகியவற்றின் அடிப்படையில், 1 ஆம் வகுப்பில் சேருவதற்கான குறைந்தபட்ச வயதை ஆறு வருடங்களாக நிர்ணயிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Centre instructs states to fix 6 years as minimum age for Class 1 admission
மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு எழுதிய கடிதத்தில், கல்வி அமைச்சகத்தின் (MoE) பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, தேசிய கல்விக் கொள்கை 2020 இல் தொடங்கப்பட்டதில் இருந்து பல முறை வெளியிடப்பட்ட அதன் வழிகாட்டுதல்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டும் கூட இதே போன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
"2024-25 அமர்வு விரைவில் தொடங்கும் போது புதிய சேர்க்கைகள் நடைபெறும். உங்கள் மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் இப்போது கிரேடு-1 இல் சேருவதற்கான வயது 6+ ஆக சீரமைக்கப்பட்டுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று பிப்ரவரி 15 தேதியிட்ட கடிதத்தில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 2022 இல், அஸ்ஸாம், குஜராத், புதுச்சேரி, தெலங்கானா, லடாக், ஆந்திரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், உத்தரகண்ட், ஹரியானா, கோவா, ஜார்கண்ட், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், ஆறு வருடங்கள் பூர்த்தி செய்யாத குழந்தைகளுக்கு 1 ஆம் வகுப்பு சேர்க்கையை அனுமதிக்கின்றன என்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்தது.
கடந்த காலங்களில், தேசிய கல்வி கொள்கை நிபந்தனையுடன் குறைந்தபட்ச வயதை சீரமைக்காதது வெவ்வேறு மாநிலங்களில் நிகர சேர்க்கை விகிதங்களின் அளவீட்டைப் பாதிக்கிறது என்று மத்திய அரசு கூறியது.
தேசிய கல்விக் கொள்கை 2020 இன் 5+3+3+4 பள்ளி முறைப்படி, முதல் ஐந்து வருடங்கள் மூன்று முதல் ஆறு வயது வரையிலான மூன்று வருட பாலர் பள்ளியையும், ஆறு முதல் எட்டு வயது வரையிலான வகுப்புகள் 1 மற்றும் 2ஐயும் உள்ளடக்கியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.