பஞ்சாப் மாநிலம் மொஹாலி அருகே சண்டிகர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தனியார் பல்கலைக்கழகம், ஆண்டுதோறும் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பயிலும்போதே அவர்களுக்கான கல்லூரி நுழைவு தேர்வை நடத்தி வருகிறது.
பல்வேறு மாணவர் கல்வி உதவி திட்டங்களை, ஆண்டுதோறும் செயல்படுத்தி வரும் இப்ப பல்கலைக்கழகம், இந்த கல்வி ஆண்டில், மாணவ மாணவிகளுக்கு 170 கோடி ரூபாய் வரை ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான தொகையை நிர்ணயம் செய்துள்ளது.
இந்த தனியார் பல்கலைக்கழகத்தின் செயல் அலுவலகம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. நடப்பு 2024-2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்புகளை பல்கலைக்கழக குழுவினர் இன்று கோவையில் வெளியிட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிறுவனர் மற்றும் துணைவேந்தர் டாக்டர்.ஆர்.எஸ்.பாவா, இயக்குனர் புனித் சர்மா, வடக்கு மண்டல மேலாளர் தீபக் பூரி மற்றும் தமிழ்நாடு மேலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் கூறியதாவது:-
இந்தியாவில் முதன்மையான பல்கலைக்கழகமாக சண்டிகர் பல்கலைக்கழகம் திகழ்கிறது. நடப்பு நிதியாண்டில் 170 கோடி ரூபாய்க்கு மாணவ மாணவிகளுக்கான ஸ்காலர் ஷிப் வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில், கலை அறிவியல், பொறியியல் மற்றும் பிஹெச்டி போன்ற அனைத்து பாட பிரிவுகளில் பயுலும் மாணாக்கர்களுக்கு, சிறப்பான கட்டமைப்பு வசதிகளும், மாணவியர்களுக்கு, பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்கும் விடுதிகளும் உள்ளது.
பட்டப்படிப்பு முடிந்தபின் 500"க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் மூலமாக மாணாக்கர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வில், தற்போது 12 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய அனைத்து மாணவ மாணவிகளும், ஆன்லைன் மூலமாக பல்கலைக்கழக வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.