changes in JEE Main Exam 2020 , Long-form questions in JEE Main 2020 : JEE main 2020 Question pattern Changes
ஒருகிணைந்த முதன்மை நுழைவுத் தேர்வில் (JEE) 2020 இந்த ஆண்டு முதல் சில முக்கிய மாற்றங்களுடன் நடைபெற இருக்கிறது. முதலாவதாக தேர்வில் உள்ள மொத்த கேள்விகளின் எண்ணிக்கை 30 முதல் 25 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
Advertisment
அதிலும், இந்த 25 கேள்விகளில் 20 கேள்விகள் கடந்த வருடத்தை போல் மல்டிபல் சாய்ஸ் கேள்விகளாக இருக்கும். கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கு சமமான வெயிட்டேஜ் இருக்கும். இந்த 20 கேள்விகளுக்கு கடந்த வருடங்களைப் போலவே, ஒவ்வொன்றிற்கும் தலா நான்கு மதிப்பெண்கள் அளிக்கப்படும். தவறாக பதில் தருவோருக்கு ஒரு நெகடிவ் மதிப்பெண் கொடுக்கப்படும்.
மீதமுள்ள ஐந்து கேள்விகள், மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளாக இல்லாமல், கேட்கப்படும் கேள்விகளுக்கு இன்டிஜரை ( நம்பரை) பதிலை தேர்வர்கள் கொடுக்கவேண்டும்.
உதரணமாக, தேசியத் தேர்வு முகமை வெளியிட்ட மாதிரி வினாத் தாள்
இந்த ஐந்து வகையான இன்டிஜர் கேள்விகளுக்கு, ஒவ்வொன்றிற்கும் தலா நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆனால், இந்த வகையான கேள்விகளுக்கு நெகடிவ் மதிப்பெண் எதுவும் வழங்கப்படாது.
வழக்கமான மல்டிபல் சாய்ஸ் கேள்விகளை மட்டும் மாணவர்களை தேர்ந்தெடுக்காமல், முழுமையான மதிப்பீட்டு முறையைப் பற்றுவதற்காக இந்த ஐந்து கேள்விகள் சேர்க்கப்பட்டிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்து இருந்தது.
ஆன்லைன் கற்றல் தளமான கேடலிஸ்ட்டின்(catalyust)தலைமை நிர்வாக அதிகாரி அகந்த் ஸ்வரூப் பண்டிட் இது குறித்து தெரிவிக்கையில், " இந்த மாற்றத்தின் மூலம் ஜேஇஇ மெய்ன்ஸ் தேர்வின் கட்-ஆப் மதிப்பெண் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது, ஏனெனில் இது மாணவர்களின் கருத்தியல் அறிவை சோதிக்க உள்ளது" என்று தெரிவித்தார்.