இந்த ஆண்டின் தொடக்கத்தில் மார்ச் மாதம், UPSC முதல்நிலை தேர்வில் (Prelims 2022) ChatGPT தோல்வியடைந்தது என்ற செய்தி இணையத்தில் பரவியது. ChatGPT கூட ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற முடியாது என்பதை அறிந்து மக்கள் மகிழ்ந்தனர் ஆனால் ஆச்சரியப்படவில்லை; சராசரியாக 10 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்ட உலகின் கடினமான தேர்வுகளில் இதுவும் ஒன்றாகும், மேலும் வெற்றி விகிதம் 1% மட்டுமே.
கணிக்க முடியாததன் மூலம் சிரமத்தை உறுதி செய்தல்
ஆண்டுக்கு ஆண்டு, UPSC ஆனது, எந்த பயிற்சியாளரும் அல்லது ஆசிரியரும் நிச்சயமாகக் கணிக்க முடியாத கேள்வி வகைகள், வடிவங்கள், கருப்பொருள்கள், துணை தலைப்புகள், வெவ்வேறு பிரிவுகளின் வினாக்களின் விகிதம் மற்றும் முதல்நிலை & முதன்மைத் தாள்களின் பிற அம்சங்களை மாற்றுவதன் மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வுகளின் சிரம நிலையை நிலைநிறுத்துகிறது. இந்த கணிக்க முடியாத தன்மையானது, விண்ணப்பதாரர்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை விட ஒரு படி மேலே இருப்பது UPSC மேற்கொண்ட புத்திசாலித்தனமான உத்தி என்று ஒருவர் கூறலாம்.
இதையும் படியுங்கள்: EMRS Recruitment 2023: மத்திய கல்வி துறையில் 38,480 காலியிடங்கள்; அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
உதாரணமாக, முதன்மைத் தேர்வு 2022 இல், கட்டுரைத் தாள் முழுத் தாளிலும் தத்துவ கேள்விகளை அறிமுகப்படுத்தி தேர்வர்களை ஆச்சரியப்படுத்தியது. இதுபோன்ற கேள்விகளுக்கு நடப்பு நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளை விட வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பதிலளிக்க வேண்டியிருப்பதால், தத்துவக் கட்டுரைகளை நோக்கிய மாற்றம் பல தேர்வர்களை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.
2023 முதல்நிலை தேர்வில் புதிய போக்குகள்
இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் முதல்நிலை (CSE Prelim) தாள் கடந்த ஆண்டு போக்குகள் மற்றும் வடிவங்களில் இருந்து கணிசமாக மாறிவிட்டது. கூற்று மற்றும் காரணம் (Assertion & Reason) வகையிலான 18 கேள்விகள் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. "2022 இல், தாளில் கூற்று மற்றும் காரணம் வகையிலான கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை, முந்தைய ஆண்டுகளில் அவற்றில் ஐந்துக்கும் குறைவாகவே இருந்தன. இந்த வகையான கேள்விகள் மிகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும், மேலும் அவை 10-15 ஆண்டுகளுக்கு முன்பு முக்கியமான கேள்வி வடிவமாக இருந்தன. யு.பி.எஸ்.சி இப்போது இந்தப் போக்கை மீண்டும் கொண்டு வந்திருப்பதாகத் தெரிகிறது. தலைப்புகளின் அகநிலை விளக்கத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்பதை இது குறிக்கிறது,” என்கிறார் சத்ய பிரகாஷ் (HOD, UPSC, திஷா வெளியீடு).
திஷா வல்லுனர்கள் செய்த பகுப்பாய்வின்படி, யு.பி.எஸ்.சி புவியியல், சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளது. தேர்வில் முன்பை விட வரைபட அடிப்படையிலான கேள்விகள் அதிகம். நேரடிக் கேள்விகளில் இருந்து கருத்து அடிப்படையிலான கேள்விகளுக்கு மாறுதல் உள்ளது. நடப்பு நிகழ்வுகள் மற்றும் பயன்பாட்டு அடிப்படையிலான கேள்விகளின் அதிகரிப்பு உள்ளது. இருப்பினும், முதல்நிலைத் தேர்வு 2023 இன் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், சுமார் 46 கேள்விகள் ஒன்று மட்டும், இரண்டு மட்டும், அனைத்து மூன்றும் மற்றும் எதுவுமில்லை போன்ற "தனித்துவ விருப்ப முறை" கொண்டவை. இதன் விளைவாக, இதற்கு முன்பு விண்ணப்பதாரர்கள் அடிக்கடி பயன்படுத்தும், எலிமினேஷன் டெக்னிக்குகளை இதுபோன்ற கேள்விகளில் பயன்படுத்த இயலாது.
முதல்நிலை தாள் 2 (CSAT) இல், குவாண்டிடேட்டிவ் ஆப்டிட்யூட் கேள்விகள் மிதமான சிரமத்துடன் காணப்பட்டன. இருப்பினும், வாசிப்பு புரிதல் பகுதி நீண்டதாக இருந்தது.
மாறிவரும் சிவில் சர்வீசஸ் தேர்வின் (CSE) போக்குகளை எவ்வாறு கையாள்வது?
கணிக்க முடியாதது யூ.பி.எஸ்.சி.,யின் விதியாக இருக்கும் நிலையில், பயிற்சியுடன் இணைந்த ஆழ்ந்த கருத்தியல் புரிதல், நம்பிக்கையைப் பெறுவதற்கும் தேர்வில் ஆச்சரியங்களைச் சமாளிப்பதற்கும் திறவுகோலாகும். முக்கிய பாட அறிவும், பகுப்பாய்வு மனப்பான்மையும், நீக்குதல் மற்றும் யூகிப்பது போன்ற நுட்பங்கள் வேலை செய்யாத இடங்களில் மதிப்பெண் பெற உதவும். ஒரு தலைப்பைப் பல கோணங்களில் பார்க்கும்போது அதைப் பற்றிய ஆழமான அறிவைப் பெறுவீர்கள். நீங்கள் கடந்த ஆண்டுகளின் வினாத் தாள்களை முயற்சி செய்வது அவசியம்.
மற்றொரு தெளிவான ஆனால் அடிக்கடி புறக்கணிக்கப்படும் அறிவுரை என்னவென்றால், பல கேள்விகள் உண்மையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தலைப்புகளின் கலவையாக இருப்பதால், ஒரு முழுப் பாடத்தையும்/ தலைப்பையும் மற்றவற்றை முதன்மையாக வைத்து விட்டுவிடக்கூடாது. இதையொட்டி, உங்களுக்கு ஒரு வலுவான கருத்தியல் புரிதல் தேவை என்று அர்த்தம், குறிப்பாக எலிமினேஷன் தந்திரம் பயன்படுத்த முடியாத தனித்துவமான விருப்ப வகை கேள்விகளை சமாளிக்க இது அவசியம்.
NCERT கருத்தாக்கங்களின் தேர்ச்சி, மேம்பட்ட கருத்துக்களுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், முதன்மை தேர்வில் பதில் எழுதுவதற்கான இணைப்புகளையும் உருவாக்க உதவும். பழைய மற்றும் புதிய NCERT கருத்துகளின் முழுமையான, ஒருங்கிணைந்த கவரேஜை வழங்கும் புத்தகங்களில் இருந்து படிப்பது, உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.
சமீபத்திய தேர்வுப் போக்குகளின் பார்வையில், புவியியல் மற்றும் வரைபடங்கள் மீதான உங்கள் புரிதல் உங்கள் ஒட்டுமொத்த மதிப்பெண்ணில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த முக்கியமான பகுதியைத் தயாரிக்க, உங்களுக்கு ஒரு அட்லஸ் மட்டும் தேவை.
UPSC தேர்வு என்பது உங்கள் அறிவு மற்றும் உறுதிப்பாட்டின் சோதனை. எனவே, உங்கள் முயற்சிகளில் விடாமுயற்சியுடன் இருங்கள் மற்றும் ஒரு திடமான உத்தியுடன் படிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.