இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் மருத்துவ ஆலோசனை குழுவும் (எம்சிசி), 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர்.
விண்ணப்பத்தாரர்கள் எம்சிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் mcc.nic.in ரெஜிஸ்டர் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போது, விண்ணப்பத்தாரர்கள் விருப்ப கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். மாணவர்கள் தங்களது விருப்ப கல்லூரி, வகுப்புகளை தேர்ந்தெடுக்கும் எண்ணிக்கையில் எவ்வித கட்டுபாடும் கிடையாது.
விரைவில் நீட் கவுன்சிலிங் தேதிகள் எம்சிசி இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன. கவுன்சிலிங் தொடர்பான தகவல்களை அறிய, அவ்வப்போது இணையதளத்தில் பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருக்கை ஒதுக்கீடு
நீட் கவுன்சிலிங்கில் மாணவர்களால் நிரப்பப்பட்ட விருப்ப வகுப்புகள், கல்லூரிகள் அடிப்படையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
மாணவர்களுக்கு முடிவில் மாற்ற செய்ய சிறிது காலம் வழங்கப்படும். குறிப்பிட்ட டைம் முடிந்தததும், மாணவர்களின் விருப்ப தேர்வு தானாகவே லாக் செய்யப்படும்.
தேவையான ஆவணங்கள்
நீட் கவுன்சிலிங் வரும் மாணவர்கள், வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். கவுன்சிலிங் செல்கையில், நீட் கவுன்சிலிங்கிற்கு ரெஜிஸ்டர் செய்த படிவத்தை வைத்திருக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- நீட் அட்மிட் கார்ட்
- நீட் ஸ்கோர்கார்ட்
- 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- 12ஆம் வகுபபு மதிப்பெண் சான்றிதழ்
- அடையாள அட்டை
- எட்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- தற்காலிக ஒதுக்கீடு கடிதம்
- சாதி சான்றிதழ்( தேவைப்பட்டால்)
- PwD சான்றிதழ் (தேவைப்பட்டால்)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil