Chennai and Kovai top Engineering colleges list for new courses: எதிர்கால தொழில்நுட்பம், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் சார்ந்த பொறியியல் படிப்புகளை தேர்ந்தெடுக்க மாணவர்களிடையே அதிக ஆர்வம் இருந்து வருகிறது. அப்படியான கோர்ஸ்கள் என்ன? எந்தெந்த கல்லூரிகளில் அந்த கோர்ஸ்கள் கிடைக்கின்றன? உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE), பல்வேறு புதிய பொறியியல் படிப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த படிப்புகள் எதிர்காலத் தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து உள்ளதால் இந்த படிப்புகளுக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்தப் படிப்புகளை தமிழகத்தில் உள்ள பல்வேறு டாப் பொறியியல் கல்லூரிகளும் பயிற்றுவித்து வருகின்றன.
இதையும் படியுங்கள்: புதிதாக 40 விருப்பப் பாடங்கள்… அண்ணா பல்கலை. சூப்பர் முயற்சி!
அதாவது மாணவர்கள் தற்போது அதிகம் படிக்க விரும்பும் படிப்புகளான கணினி அறிவியல் (Computer Science)சார்ந்த, தகவல் தொழில்நுட்பம் (Information Technology), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science), கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் பிஸினஸ் சிஸ்டம் (Computer Science and Business System), கம்ப்யூட்டர் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் (Computer and Communication Engineering), சைபர் செக்யூரிட்டி (Cyber Security), இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things) போன்றவை பல்வேறு கல்லூரிகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, ராஜலட்சுமி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, சாய்ராம் கல்வி நிறுவனங்கள், சவீதா பல்கலைக்கழகம், செயிண்ட் ஜோசப் இன்ஜினியரிங் காலேஜ் ஆகியவை சென்னையில் இந்த படிப்புகளை வழங்கும் பிரபல கல்லூரிகளாகும்.
அதேநேரம் கோவை பி.எஸ்.ஜி இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் ஆகியவை கோவை பகுதியில் இந்த புதிய படிப்புகளை வழங்கும் பிரபல கல்லூரிகளாகும்.
இதுதவிர, வேறு சில கல்லூரிகளும் இந்தப் படிப்புகளை வழங்குகின்றன. நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் தெரிந்துக் கொண்டு, அந்த கல்லூரிகளை அணுகலாம்.
இந்தக் கல்லூரிகளில் இந்தப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறை தொடங்கியுள்ளது. சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் இந்தக் கல்லூரிகளை அணுகி, சேர்க்கை பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.