சென்னை தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட உதவியாளர், திட்ட இணை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு நிறுவனமான தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் 27.10.2023 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம்.
Project Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : Diploma in Catering Technology / Catering Science/ B.Sc. in Biotechnology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,000
Project Associate-I
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : B.E / B.Tech in Leather Technology/ MSc Biochemistry / Biotechnology / Molecular Biology / Life Sciences / Genetic Engineering/ M.Sc Chemistry / Microbiology/ M.Sc Chemistry / Organic Chemistry / Polymer Chemistry படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,000
Project Associate-II
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : M.Sc. in Molecular Biology / Biotechnology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 28,000
Junior Research Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : MSc in General Chemistry/ Organic Chemistry / Biochemistry படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31,000
Senior Research Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : M.Sc. Medical Biochemistry/ M.Tech in Biotechnology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 35,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.
விருப்பமுள்ளவர்கள் 27.10.2023 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் தேவையான ஆவணங்களுடன் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://clri.org/WriteReadData/Opportunity/1996338149CLRI%20Notification%20No.10-2023.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“