scorecardresearch

சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை; டிப்ளமோ, டிகிரி, பி.இ படித்தவர்களுக்கு வாய்ப்பு!

சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

jobs
அரசு வேலை

சென்னை தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு நிறுவனமான தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திட்ட உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்: கோவை மாவட்ட வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

Scientific Administrative Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். B.Sc/BCA computer science, B.com படிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயதுத் தகுதி : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000

Project Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in ECE/EEE/Mechanical/Refrigeration and Air conditioning படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000

Project Associate

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி : B.E/ B.Tech (CSE/IT/Leather Technology), M.Sc (Chemistry, Biochemistry, physics, Microbiology, BioTechnology) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 25,000

ICMR – Junior Research Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MSc Life Sciences / Bio-chemistry / Medical Biochemistry / Animal Sciences / Bio-Technology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 31,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 28.03.2022 மற்றும் 29.03.2022

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CSIR – Central Leather Research Institute, Sardar Patel road, Adyar, Chennai – 600020

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://clri.org/WriteReadData/Opportunity/1106437168Notification%20No.02-2023.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Chennai central leather research institute recruitment 2023 for various jobs

Best of Express