/indian-express-tamil/media/media_files/5SHaEVs87ONmriPNHgHG.jpg)
சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வேலை வாய்ப்பு
சென்னை தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஐ.டி.ஐ அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மத்திய அரசு நிறுவனமான தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பயிற்சி பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் 27.09.2024 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம்.
ITI apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை: 20
Electrician - 5
Mechanic- Refrigeration & Air conditioning - 2
Mechanic- Power Electronics - 1
Instrument Mechanic (or) Mechanic- Communication Equipment Maintenance (or) Mechanic- Industrial Electronics - 1
Plumber - 2
Mason (Building constructor)/ Building Maintenance Technician - 1
Draughtsman (Civil) - 2
Secretarial Assistant - 2
Horticulture Assistant - 1
Florist and Landscaper - 1
Gardener (Mali) - 2
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ. 10,500
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.
விருப்பமுள்ளவர்கள் 27.09.2024 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் தேவையான ஆவணங்களுடன் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://clri.org/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.