சென்னை தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மத்திய அரசு நிறுவனமான தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் 01.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Technical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 22
Quality Assurance – 3
Fine Chemicals – 1
Instrumentation – 1
Animal House – 1
Leather Processing – 4
Leather Products – 2
Footwear Technology – 3
Fashion & Design – 1
Textile Technology – 1
Common science facilities for Biological Lab – 1
Analytical Services – 4
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.03.2025 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 70,290
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://technical.clri.org/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.03.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.