சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் எப்போது?

University of Madras Exam results tamil news: சென்னை பல்கலைக்கழகம் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை இந்த வார இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

chennai city news in tamil University of Madras will announce first semester exam results by this week

Chennai City News in Tamil: கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து பல்கலைக்கழங்களும் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை நடத்தின. அதன்படி சென்னை பல்கலைக்கழகமும் அதன் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் சுமார் 2 லட்ச மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் பிப்ரவரி 10 முதல் 23 தேதிகளில் நடந்த முதல் செமஸ்டர் தேர்வில் 50,000-திற்கும் அதிகமானோர் ஆன்லைன் தேர்வு எழுதினர். அதேசமயம் சுமார் 60,000 மாணவர்கள் டிசம்பர் 21 மற்றும் பிப்ரவரி 10 ஆகிய தேதிகளில் தங்களின் அரியர் தேர்வுகளை எழுதியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுக்கு சுமார் 1 லட்சம் மாணவர்கள் தங்களின் அரியர் தேர்வுகள் எழுதுவதற்காக விண்ணப்பித்து இருந்தனர். இருப்பினும், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து ரத்து செய்யப்பட தேர்வுகளை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றம் அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் நடத்தப்பட்ட முதல் செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகளை இந்த வார இறுதிக்குள் பல்கலைக்கழகம் வெளியிடவுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai city news in tamil university of madras will announce first semester exam results by this week

Next Story
ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் மூடப்படுமா? பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் விளக்கம்Schools will not close after april 1st, ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் மூடப்படாது, schools continuely function, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், tamil nadu school education departrment director, tamil nadu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express