சென்னை தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட உதவியாளர், திட்ட இணை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு நிறுவனமான தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் 14.05.2025 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம்.
Project Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Diploma in Computer Engineering/ Information Technology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 20,000
Project Associate-I
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: M.Sc. in Computer Science/ Data Science/ B.E/ B.Tech in Computer Science/ Biomedical /Artificial Intelligence and Data Science/ Electronics and Communication/ Instrumentation Engineering/ Information Technology / M.Sc in Computer Science / MCA/ M.Sc. in Chemistry /Industrial Chemistry/ General Chemistry/ Organic Chemistry/ M.Sc (Bioinformatics/ Chemistry /Biotechnology) or BE/ B.Tech in Biotechnology/ Bioinformatics படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,000 – 30,000
Junior Research Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MSc in Chemistry படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 31,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமுள்ளவர்கள் 14.05.2025 அன்று நடைபெறும் எழுத்து தேர்விலும், 15.05.2025 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்விலும் தேவையான ஆவணங்களுடன் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு நடைபெறும் இடம்: CSIR-Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai – 600020
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.