Advertisment

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வர்களுக்கு குட் நியூஸ்; சென்னையில் இலவச பயிற்சி; விண்ணப்பிப்பது எப்படி?

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு அரசு நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகள்; சென்னையில் எங்கு நடைபெறுகிறது? எப்போது தொடங்குகிறது? முழு விபரம் இங்கே

author-image
WebDesk
New Update
tnpsc exam free camp,TNPSC Group I Exam free Class, District Employment office

சென்னையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (ஜூலை 18) முதல் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். குரூப் 2 தேர்வில் வெற்றி பெற விரும்புபவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. 507 குரூப் 2 பணியிடங்கள் மற்றும் 1,820 குரூப் 2ஏ பணியிடங்கள் என மொத்தம் 2327 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் ஜூலை 19 ஆம் தேதி கடைசி தேதியாகும்.

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு சென்னையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-2-விற்கு 507 காலிப்பணியிடங்களும், குரூப்-2ஏ-விற்கு 1,820 பணியிடங்களும் என மொத்தமாக 2,327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டது.

குரூப்-2, 2 ஏ-விற்கான முதல்நிலைத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை கிண்டியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை கிண்டியிலுள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம். 

மேலும், விவரங்களுக்கு decgc.chennai24@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்." இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment