சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையில் மருத்துவ அலுவலர், செவிலியர், மருத்துவமனைப் பணியாளர் உள்ளிட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8 ஆம் வகுப்பு முதல் எம்.பி.பி.எஸ் வரை படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையின் கீழ் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் மருத்துவ அலுவலர், செவிலியர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 560 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: TNSTC Jobs: 807 டிரைவர்- கண்டக்டர் நியமனம்; கடைசி நேர வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
மருத்துவ அலுவலர் (Medical Officer)
காலியிடங்களின் எண்ணிக்கை : 140
கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 60,000
செவிலியர் (Staff Nurse)
காலியிடங்களின் எண்ணிக்கை : 140
கல்வித் தகுதி : Diploma in GNM/ BSC., (Nursing) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 18,000
சுகாதார ஆய்வாளர் (Health Inspector)
காலியிடங்களின் எண்ணிக்கை : 140
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மற்றும் Multipurpose Halth worker (male) / Health Inspector / Sanitary Inspector course படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 14,000
மருத்துவமனை பணியாளர் (Hospital Worker)
காலியிடங்களின் எண்ணிக்கை : 140
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 8,500
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://chennaicorporation.gov.in/gcc/CCUHM1/Application_Form.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, 3rd Floor, Amma Maligai, Rippon Buildings, Chennai – 3.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.03.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/gcc/CCUHM1/Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.