Advertisment

உதவி செவிலியர் பயிற்சி படிப்பு; சென்னை மாநகராட்சி அறிவிப்பு

இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி படிப்பில் சேர தகுதியுள்ள மாணவிகளுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு

author-image
WebDesk
Dec 01, 2022 14:34 IST
சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு; 74 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

Chennai Corporation

இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி படிப்பில் சேர தகுதியுள்ள மாணவிகளுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

Advertisment

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்: வேலை பார்த்துக் கொண்டே படிக்கலாம்; ஐ.ஐ.டி மெட்ராஸில் ஆன்லைன் படிப்பு அறிமுகம்

இப்பயிற்சியில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் பெண் வாரிசுகளுக்கும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்

இந்தப் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒற்றைச் சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பயிற்சி படிப்புகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் நேரில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி : இயக்குனர் (பொ), தொற்றுநோய் மருத்துவமனை, எண். 187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை – 600081.

டிசம்பர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Jobs #Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment