சென்னை மாநகராட்சியில் செவிலியர், கணக்காளர், உதவியாளர் உள்ளிட்ட காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
தேசிய நகர்ப்புற நல்வாழ்வு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 விதமான பதவிகளில் மொத்தம் 61 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
செவிலியர் (Staff Nurse)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 25
கல்வித்தகுதி : டிகிரி அல்லது டிப்ளமோ செவிலியர் (Nursing) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 14,000
ஆய்வக உதவியாளர் (Lab Technician)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 05
கல்வித்தகுதி : 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் Diplomo in Medical Lab Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000
அறுவை சிகிச்சை அரங்க உதவியாளர் (OT Assistant)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 05
கல்வித்தகுதி : 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் Diploma in Operation Theatre Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,400
கண் சிகிச்சை உதவியாளர் (Ophthalmic Assistant)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 05
கல்வித்தகுதி : 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் Diploma in Ophthalmic Assistant படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 12,000
தொற்றுநோயியல் நிபுணர் (Epidemiologist)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித்தகுதி : DPH/MPH
சம்பளம் : ரூ.47,250
கணக்காளர் (Account officer)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித்தகுதி : B.Com அல்லது CA படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 30,000
உதவி கணக்காளர் (Account assistant)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித்தகுதி : B.Com படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.14,000
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்- கணக்காளர் (DEO cum Accountant)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 03
கல்வித்தகுதி : B.Com படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 14,000
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் (Data Entry Operator)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 04
கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,350
உளவியலாளர் (Psychologist)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித்தகுதி : Post Graduate degree in Psychology
சம்பளம் : ரூ. 18,000
சமூக சேவகர் (Social Worker)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 05
கல்வித்தகுதி : Post Graduate in degree in Social Work
சம்பளம் : ரூ. 18,000
மருந்தாளர் (Pharmacist)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித்தகுதி : Diploma in Pharmacy
சம்பளம் : ரூ. 10,000
மருத்துவமனை உதவியாளர் (Hospital Worker)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 02
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 5000
பாதுகாவலர் (Security Staff)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 02
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 6,300
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேவையான ஆவணங்களுடன் மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி : gcchealthhr@chennaicorporation.gov.in
முகவரி : Office of the Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, Rippon Buildings, Chennai – 3
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.10.2021
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 11.10.2021
இந்த அறிவிப்பு குறித்து விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/gcc/Rect/NUHM_NOTICE_APPLICATION.pdf மற்றும் https://chennaicorporation.gov.in/gcc/Rect/EC_RC_NOTICE_APPLICATION.pdf என்ற இணையதள பக்கங்களைப் பார்வையிடவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.