சென்னை மாநகராட்சியில் (Chennai Corporation) தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தில் செவிலியர், மருத்துவ பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 விதமான பணியிடங்களில் 133 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Auxiliary Nurse Midwife
காலியிடங்களின் எண்ணிக்கை: 122
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ANM/GNM படித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 14,000
District Consultant (Quality)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : Dental /Ayush /Nursing /Social Science/ Life Science Graduates with Masters in Hospital Administration/ Public Health/ Health Management/ Epidemiology படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 40,000
Programme cum Administrative Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
Psychologist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : Post Graduate degree in Psychology or Clinical Psychology or Applied Psychology and a Master of Philosophy in Clinical Psychology or Medical and Social Psychology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Social Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி : Post-graduate degree in Social Work and a Master of Philosophy in Psychiatric Social Work படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,800
Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி : 8 ஆம் படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 5,000
Security Staff
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : 8 ஆம் படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 6,300
வயதுத் தகுதி: 45 வயது வரை உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://chennaicorporation.gov.in/gcc/pdf/NUHM_APPLICATION.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Member Secretary, Chennai City Urban Health Mission Public Health Department, Ripon Buildings, Chennai – 600 003
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.09.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/gcc/pdf/NUHM_APPLICATION.pdf என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.