Advertisment

சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு; 221 பணியிடங்கள்; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை மாநகராட்சியில் 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 221 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai corporation

Greater Chennai corporation

சென்னை மாநகராட்சியில் (Chennai Corporation) செவிலியர், மருந்தாளுனர், ஆய்வக நுட்புனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 விதமான பணியிடங்களில் 221 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: BSNL நிறுவனத்தில் வேலை; 11705 காலியிடங்கள்; இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு!

Auxiliary Nurse Midwife

காலியிடங்களின் எண்ணிக்கை: 183

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ANM படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 14,000

Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 19

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Diploma in Lab Technician Course படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

X - Ray Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி : X Ray Technician படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,000

Operation Theatre Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி : Diploma in Operation Theatre Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,400

Ophthalmic Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி : Diploma in Ophthalmic Assistant படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://chennaicorporation.gov.in/gcc/NUHM/Application%20Form%20Tamil.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Member Secretary, Chennai City Urban Health Mission Public Health Department, Ripon Buildings, Chennai – 600 003

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.01.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/gcc/NUHM/Advertisment%20for%20Paramedical%20Staff.pdf என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Greater Chennai Corporation Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment