scorecardresearch

சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு; 74 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

சென்னை மாநகராட்சியில் 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 74 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு; 74 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!
Chennai Corporation

சென்னை மாநகராட்சி (Chennai Corporation) மாவட்ட நலவாழ்வு சங்கத்தில், மருத்துவர், ஆய்வக நுட்புனர் தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 74 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: UPSC Exam: மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பகிர்வு, சிறுசேமிப்பின் தாக்கங்கள்… முக்கிய டாபிக்ஸ் இங்கே!

Medical Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 60,000

District PPM Coordinator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : MSW/ M. Sc Psychology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 26,500

Statistical Assistant Cum DEO

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : Graduate in statistics with Diploma in computer application படித்திருக்க வேண்டும். மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 26,000

Senior Treatment Supervisor

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி : அறிவியல் பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,800

Data Entry operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு மற்றும் Diploma in computer application படித்திருக்க வேண்டும். மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,500

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 52

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

TB Health Visitor

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி : அறிவியலில் இளங்கலை பட்டம் அல்லது 12 ஆம் வகுப்பு மற்றும் MPHW/ LHV/ ANM/ Health worker படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,300

Counselor

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி : Degree in Social Work/ Sociology/ Psychology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://chennaicorporation.gov.in/gcc/ntep/Application_Form.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Programme Officer, District TB Centre, No.26, Puliyanthope High Road, Puliyanthope, Chennai- 600 012

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.01.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/gcc/ntep/Notification_English.pdf என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Chennai corporation recruitment 2023 for 74 health projects posts apply soon