Advertisment

சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சென்னை மாநகராட்சியில் டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 10 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
greater chennai corporation

சென்னை மாநகராட்சியில் டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

சென்னை மாநகராட்சி (Chennai Corporation) நகர்ப்புற சுகாதார இயக்கத்தில் உளவியலாளர் மற்றும் சமூகப் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Counseller/ Psychologist 

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: M.A. or M.Sc. in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 23,000

Psychiatric Social Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: M.A Social Work (Medical/Psychiatry) or Master of Social Work (Medical/ Psychiatry) படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 23,000

வயதுத் தகுதி: 01.08.2024 அன்று 40 வயது வரை உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://chennaicorporation.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Office of the Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, 3rd Floor, Amma Maligai Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 3

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.09.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/ என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment