Advertisment

சென்னை மாநகராட்சியில் வேலை; 220 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் 12 ஆம் வகுப்பு, டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 220 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
Property tax Chennai Corporation sent notices to central govt offices Tamil News

சென்னை மாநகராட்சியில் 12 ஆம் வகுப்பு, டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் (Chennai Corporation) தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தில் செவிலியர், மருத்துவ பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 விதமான பணியிடங்களில் 220 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Epidemiologist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Medical Graduate with Post Graduate Degree/Diploma in Preventive and Social Medicine / Public Health or Epidemiology (such as MD, MPH, DPH, MAE etc.) (Or)M.Sc. in Life Sciences with 2 years MPH (Masters in Public Health).(Or)M.Sc. (Epidemiology) with 2 years’ experience in Public Health படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 60,000

Medical Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 28

கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 60,000

Staff Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை: 71

கல்வித் தகுதி: Diploma in Nursing or General Nursing and Midwifery / B.Sc., (Nursing) படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 18,000

Lab Technician 

காலியிடங்களின் எண்ணிக்கை: 33

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Diploma in Lab Technician படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Diploma in Pharmacist படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

X - Ray Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி : X-Ray technician படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,300

Auxiliary Nurse Midwife

காலியிடங்களின் எண்ணிக்கை: 70

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ANM படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 14,000

Operation Theatre Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி : Diploma in Operation Theatre Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 11,200

Accounts assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : B.Com or M.Com படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 16,000

வயதுத் தகுதி: 45 வயது வரை உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://chennaicorporation.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Member Secretary, Chennai City Urban Health Mission Public Health Department, Ripon Buildings, Chennai – 600 003

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.08.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/ என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment