சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு; 345 பணியிடங்கள்: தகுதி, தேர்வு முறை என்ன?

சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு; 345 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு; 345 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
greater chennai corporation

சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு

சென்னை மாநகராட்சி (Chennai Corporation) தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தில் மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீசியன், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 345 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.04.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Medical Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 60

கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும்

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 60,000

Staff Nurse 

காலியிடங்களின் எண்ணிக்கை: 60

கல்வித் தகுதி: Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 18,000

MPHW/ MultiPurpose Health Worker (Health Inspector Grade-II) - Male 

காலியிடங்களின் எண்ணிக்கை: 60

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Multipurpose Health worker (male) / Health Inspector/ Sanitary Inspector course training படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

Support Staff

காலியிடங்களின் எண்ணிக்கை: 60

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Auxiliary Nurse and Midwife (ANM)

காலியிடங்களின் எண்ணிக்கை: 88

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் ANM கோர்ஸ் படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

X - Ray Technician 

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: X-Ray technician படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 13,300

Special Educator for Behavioural Therapy 

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Bachelors/ Master’s degree in Special Education in Intellectual Disability படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 23,000

Occupational Therapist 

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Bachelors/ Master’s degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 23,000

Social Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Master of Social Work (MSW) படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 23,800

Senior Lab Technician 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Post Graduate Diploma in Genetic Diagnosis Technology/ Cytogenetics மற்றும் Degree in Biotechnology /Human Genetics /Molecular Biology/ Medical Laboratory Technician படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

Lab cum Store Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma in Medical Laboratory Technician படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://chennaicorporation.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, 3rd Floor, Amma Maligai Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 3

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.04.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/ என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.

Greater Chennai Corporation Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: