சென்னை கிண்டியில் உள்ள தலைமை நீர் பகுப்பாய்வகம் மற்றும் சென்னை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் பொது சுகாதார ஆய்வகங்களில் வேதியியலாளர், ஆய்வக நுட்புனர், ஆய்வக உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Chemist
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வித் தகுதி: B.Sc or M.Sc degree with Chemistry படித்திருக்க வேண்டும். ஆய்வக பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 21,000
Laboratory Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் உயிரியியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Diploma in Medical Laboratory Technology (DMLT) படித்திருக்க வேண்டும். ஆய்வக பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 13,000
Laboratory Attendant
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 8,500
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: cwadph.chn@gmail.com
முகவரி: The Chief Water Analyst, Chief Water Analysis Laboratory, King Institute Campus, Gunidy, Chennai – 600 032
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.03.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.