Advertisment

அரசு வேலை வாய்ப்பு பயிற்சி துறையில் 8 காலியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலகத்தில் வேலை; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Central Govt Jobs,

அரசு வேலைவாய்ப்பு

சென்னையில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரக அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழக வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அதேநேரம், பி.சி, எம்.பி.சி, பி.சி.எம் பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட முகவரியில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : துணை இயக்குனர் (நிர்வாகம்), வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, ஆணையரகம் (வேலை வாய்ப்புப் பிரிவு), எண். 42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600032

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.08.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment