மீன்வளத்துறையில் வலை பழுது பார்ப்பவர் மற்றும் பிட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சகத்தின் கீழ், சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வரும் சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம் அலுவலகத்தில் வலை பழுதுபார்ப்பவர் மற்றும் பிட்டர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.11.2021
வலை பழுதுப்பார்ப்பவர் – NETMENDER
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மீன்பிடி வலைகளை தயாரித்தல் மற்றும் சரி செய்தல் பற்றிய அறிவு இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 18 முதல் 25 வயது வரை. இருப்பினும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 5,200 – 20,200
பிட்டர் – FITTER
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பிட்டர் பிரிவில் ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 18 முதல் 30 வயது வரை. இருப்பினும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 5,200 – 20,200
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அல்லது திறனறி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://fsi.gov.in/LATEST-WB-SITE/fsi-main-pg-frm.htm என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : மண்டல இயக்குனர், சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம், மீன்பிடி துறைமுக வளாகம், இராயபுரம், சென்னை – 600013
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.11.2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil