‘இத்தனை ஆண்டில் ஒரு பழங்குடியின பேராசிரியர் கூட கிடைக்கலையா?’ – ஐகோர்ட் அதிர்ச்சி

அம்பேத்கர் பெயர் சூட்டுவதில் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அக்கறை காட்டுகிறது

chennai high court about tribal professors appointment
chennai high court about tribal professors appointment

நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளை கடந்தும் தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலைகழகத்திலும் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக நியமிக்கப்படாதது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஜூலை மாதம், தமிழகம் முழுவதும் சட்டக் கல்லூரிகளுக்கு 186 உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டது.

பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பதால், அதை ரத்து செய்து, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கி புதிய அறிவிப்பாணை வெளியிட உத்தரவிடக்கோரி குணநிதி, சுவாதி ப்ரியா ஆகியோர் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கும் மற்றும் அரசியல்சாசன விதிகளுக்கும் முரணாக பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தேர்வு நடவடிக்கைகளில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டுமென என அறிவுறுத்திய நீதிபதி, சட்டவிரோதமாகவும், முறையற்ற வகையிலும் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ஆய்வு செய்து அடையாளம் காண சிறப்பு ஆய்வுக்குழுவை அமைக்க வேண்டுமெனவும் பல்கலைக்கழக மானிய குழுவுக்கு உத்தரவிட்டார்.

நாடு சுதந்திரமடைந்த பிறகு, தமிழகத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் கூட சட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைகழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்படவில்லை என்பதை சட்டத்துறை அதிகாரிகளோ, சட்டக்கல்வி இயக்குனரோ, சட்ட அமைச்சரோ கவனிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை என நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இட ஒதுக்கீட்டு கொள்கை அனைத்து மட்டங்களில் அமல்படுத்தப்படுவதை சட்ட அமைச்சர் உறுதிசெய்ய வேண்டுமென நீதிபதி அறிவுறுத்தினார்.

ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாடுபடுவதாக அரசியல் கட்சிகள் கூறிக்கொள்ளும் நிலையில், நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் கடந்த நிலையில், பல கட்சிகள் ஆட்சி செய்த போதிலும் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக நியமிக்கப்படவில்லை என நீதிபதி அதிர்ச்சி தெரிவித்தார்.

அரசியல் சாசனம் வழங்கும் இடஒதுக்கீட்டு கொள்கையை முறையாக அமல்படுத்தாமல், சட்ட கல்லூரிகளுக்கும், பல்கலைகழகத்துக்கும் அரசியல்சாசன மேதை அம்பேத்கர் பெயர் சூட்டுவதில் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அக்கறை காட்டுவதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai hc orders tribal professors to appoint in govt law colleges and universities

Next Story
‘கதிர்காமு மீது வெள்ளிக்கிழமை வரை நடவடிக்கை இல்லை’ – நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிKathirkamu sex abuse case
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express