Advertisment

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்; அரசாணையை எதிர்த்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற ஐகோர்ட்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு; ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு பாதிப்பு என வாதம்; விசாரணைக்கு ஏற்றது சென்னை உயர் நீதிமன்றம்

author-image
WebDesk
New Update
court tnpsc

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் தமிழ் மொழித் தகுதித் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 தேர்வில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். இந்த மதிப்பெண் வேலைவாய்ப்புக்கான இறுதி மதிப்பெண்ணில் கணக்கில் கொள்ளப்படும். முன்னதாக குரூப் 4 தேர்வில் தமிழ் அல்லது ஆங்கில பாடம் இரண்டும் இருந்தது. தேர்வர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பாடத்தை தேர்வு செய்துக் கொள்ளலாம்.

இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அனைத்து அரசு பணிகளுக்கான தேர்விலும் தமிழ் மொழியை கட்டாயமாக்கியது. அதனைத் தொடர்ந்து குரூப் 4 தேர்வில் ஆங்கில பாடம் நீக்கப்பட்டு, தமிழ் மொழிப்பாடம் கட்டாயமாக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் ஆங்கில பாடம் விருப்பப் பாடமாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், குரூப் 4 தேர்வில் தமிழ் மொழித் தேர்வை கட்டாயமாக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசாணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், குரூப் 4 தேர்வில் தமிழ் தகுதித் தாளில் 40% மதிப்பெண் கட்டாயம் என்ற 2021 அரசாணையின் சட்டப்பூர்வத் தன்மையை உறுதி செய்து தனி நீதிபதி 2024 மே 30 அன்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எஸ் நிதீஷ் உட்பட பத்து தேர்வர்கள் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு தற்காலிக தலைமை நீதிபதி ஆர் மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் முன் வந்தப்போது, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது. இருப்பினும், மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் 2021 அரசாணை மற்றும் 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பு உள்ளிட்ட சில முக்கிய விஷயங்களை எழுப்பியதை அடுத்து, பெஞ்ச் முடிவை மாற்றிக் கொண்டு ஜூன் 11 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்தது.

குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட பல தேர்வுகளுக்கு தமிழ் மொழித் தேர்வு தகுதித் தேர்வாகவே மட்டுமே உள்ளது. ஆனால் குரூப் 4 தேர்வுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ் மொழித் தேர்வு மதிப்பெண்ணும் மதிப்பெண் முறையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று நளினி சிதம்பரம் குறிப்பிட்டார். 
தமிழ் மொழித் தேர்வு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படுவது குறித்து மனுதாரர்களுக்கு எந்தக் குறையும் இல்லை, ஆனால் ஆங்கில வழியில் படித்ததவர்களுக்கு 40% மதிப்பெண் கட்டாயம் என்பது பாதகமாக உள்ளது என்றும் நளினி சிதம்பரம் கூறினார்.

“இந்த அரசாணை, தமிழ் வழியில் பயின்றோர்களுக்கான (பி.எஸ்.டி.எம்) சட்டத்தின் 40வது பிரிவுக்கு எதிரானது, இதன் கீழ் தமிழ் வழியில் பயின்ற விண்ணப்பதாரர்களுக்கு 20% பதவிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், பொது ஆங்கிலத் தேர்வை நீக்கிவிட்டு 100% பணியிடங்கள் தமிழ்வழி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் மனுதாரர்கள் வேதனையடைந்துள்ளார்கள்” என்று நளினி சிதம்பரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குரூப் 4 தேர்வில் உள்ள 6,000 அல்லது அதற்கு மேற்பட்ட பதவிகளில் 2,000 இடங்களுக்கு மேல் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டது சட்டப்பூர்வமானதா என்றும் நளினி சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai High Court Tnpsc Group4
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment