Advertisment

பட்டதாரி ஆசிரியர் பணி நியமன பட்டியலுக்கு இடைக்கால தடை; ஐகோர்ட் உத்தரவு

பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் தேர்வின் அடிப்படையில் இறுதிப் பணி நியமனப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை; உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

author-image
WebDesk
New Update
TRB UGTRB Result 2024 released for Graduate teacher Tamil News

பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் தேர்வின் அடிப்படையில் இறுதிப் பணி நியமனப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி நடந்த பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் தேர்வின் அடிப்படையில் இறுதிப் பணி நியமனப் பட்டியலை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த சுதா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது; "பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி நடந்தது. 130 மையங்களில் நடந்த தேர்வை 41,485 பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான விடை குறிப்புகள் பிப்ரவரி 19 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான நியமனத் தேர்வில் இறுதி விடை பட்டியில் வெளியிடப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. 

இந்த பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் தேர்வில் ஆங்கில பாட ஆசிரியருக்கான தேர்வில் 13 வினாக்களுக்கு எந்தப் பதிலைத் தேர்வு செய்திருந்தாலும் மதிப்பெண் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 11 வினாக்களுக்கு ஏதாவது 3 பதில்களைத் தேர்வு செய்தால் மதிப்பெண் என மொத்தம் 24 வினாக்கள் தவறாக இருப்பதால் இதற்கு மதிப்பெண் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு ஏற்புடையதல்ல.

எனவே, தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி விடைத்தாள் அடிப்படையில், பணி நியமன பட்டியல் வெளியிட தடை விதிக்க வேண்டும். வல்லுநர் குழுவை வைத்து ஆய்வு செய்து இறுதி விடை தாளின் அடிப்படையில் பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இதே போல் ஜெயந்தி என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் தேர்வின் அடிப்படையில் இறுதிப் பணி நியமனப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் இரண்டு வாரங்களுக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trb Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment